திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.100 கோடி கொள்ளை! உண்டியல் பணத்தை எண்ணும்போது திருட்டு? பகீர் வீடியோ
திருப்பதி: ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக இருந்த 2019- 2024 காலகட்டத்தில் திருப்பதியில் மிகப் பெரிய கொள்ளை நடந்ததாக பாஜக குற்றஞ்சாட்டியது. திருப்பதியில் மக்கள் உண்டியலில் போட்ட பணத்தில் இருந்து சுமார் 100 கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் ஜெகன் கட்சியைச் சேர்ந்த பலருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக அவர் சாடியுள்ளார்.
இந்தியாவில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்று திருப்பதி. அங்குள்ள ஏழுமலையானை தரிசிக்க இந்தியா மட்டுமின்றி, உலகெங்கும் இருந்தும் பல்வேறு பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதிக்கு வருகிறார்கள். இதற்கிடையே முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திருப்பதி தேவஸ்தான உண்டியலில் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

திருப்பதி கோயில்
இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். கோவில் ஊழியர் ரவிக்குமார் என்பவர் உண்டியலில் இருந்து பணத்தைத் திருடியதாகக் கூறி, அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளை வெளியிட்டார். இந்தப் பானு பிரகாஷ் ரெட்டி பாஜகவை சேர்ந்தவர் மட்டுமில்லை. இவர் திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினராகவும் இருக்கிறார். கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல் பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ரூ.100 கோடி கொள்ளை
மேலும் இந்தப் பணம் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லமான தடேபள்ளி அரண்மனைக்கு அனுப்பப்பட்டதாகவும் பிரகாஷ் ரெட்டி குற்றம்சாட்டினார். 2019 முதல் 2024 வரையிலான ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்த சூழலில், அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்ததாக அவர் கூறியிருக்கிறார். இந்த 100 கோடி ரூபாய் திருட்டுதான் திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் மிகப் பெரிய கொள்ளை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் திருப்பதியில் உண்டியல் பணம் எண்ணும் காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. மேலும், உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், பணத்தை மறைத்து வைப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல மற்றொரு காட்சியில் ஒரு நபரை அதிகாரிகள் திரும்பத் திரும்பச் சோதனை செய்வது போன்ற வீடியோ இருக்கிறது.
#YCPTirumalaMahaPapam
— Lokesh Nara (@naralokesh) September 20, 2025
వైసిపి గజదొంగలు శ్రీవారి సొత్తూ దోచుకున్నారు. వందకోట్ల పరకా'మనీ దొంగ' వెనుక వైసీపీ నేతలు
జగన్ ఐదేళ్ల పాలనలో అవినీతి రాజ్యమేలింది. అరాచకం పెచ్చరిల్లింది. దొంగలు, దోపిడీదారులు, మాఫియా డాన్లకు ఏపీని కేరాఫ్ అడ్రస్ చేసారు జగన్. గనులు, భూములు, అడవులు, సమస్త… pic.twitter.com/Pwssua12YM
நாரா லோகேஷ்
பாஜக வெளியிட்டுள்ள இந்த வீடியோவை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷும் பகிர்ந்துள்ளார். ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் ஆந்திராவில் பல முக்கிய பொறுப்புகளைத் திருடர்களை ஆக்கிரமித்து இருந்ததாகவும் அதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சி என்பது போலச் சொல்லி நாரா லோகேஷ் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பான வழக்கை சிஐடி விசாரணை மாற்றி ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இதன் விசாரணையை ஒரு மாதத்திற்குள் நடத்தி முடித்து, சீலிடப்பட்ட கவரில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும் பிரகாஷ் ரெட்டி தெரிவித்தார்.
ஜெகன் வீட்டில் திருப்பதி பணம்
மேலும், இந்த சம்பவம் நடந்த போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் பூமானா கருணாகர் ரெட்டி தேவஸ்தான தலைவராக இருந்தார் என்பதைச் சுட்டிக்காட்டிய பிரகாஷ் ரெட்டி, இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு கருணாகர் ரெட்டி பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். திருப்பதி உண்டியலில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு, முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications