திருப்பூரை மொத்தமாக தட்டி தூக்கும் திமுக.. 8ல் 5 தொகுதிகளை கைப்பற்றுகிறது.. வெளியான கருத்து கணிப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் கீழ் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் 2026 தேர்தலில் இதில் 5 தொகுதிகளில் இந்த முறை திமுக வெற்றிபெறும் என்று அக்னி செய்தி நிறுவனம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியவற்றை துல்லியமாக கணித்த இந்த செய்தி நிறுவனம், இந்த முறை திருப்பூர் மாவட்டத்திற்கான கணிப்பை வெளியிட்டு உள்ளது.

இப்போது தேர்தல் நடந்தால் திருப்பூரில் தேர்தல் குறித்த மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்ற கணிப்பில் பின்வரும் தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
அதன்படி,
அவினாசி (தனி) திமுக கூட்டணி வெற்றி பெறும்
திருப்பூர் (வடக்கு) அதிமுக கூட்டணி வெற்றி பெறும்
திருப்பூர் (தெற்கு) திமுக கூட்டணி வெற்றி பெறும்
பல்லடம் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்
உடுமலைப்பேட்டை திமுக கூட்டணி வெற்றி பெறும்
மடத்துக்குளம் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்
தாராபுரம் (தனி) திமுக கூட்டணி வெற்றி பெறும்
காங்கேயம் திமுக கூட்டணி வெற்றி பெறும்
கோவை பிளான்
அதேபோல் கோவை மாவட்டத்தின் கீழ் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் திமுக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் 2026 தேர்தலில் இதில் 7 தொகுதிகளில் இந்த முறை திமுக வெற்றிபெறும் என்று அக்னி செய்தி நிறுவனம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தல் ஆகியவற்றை துல்லியமாக கணித்த இந்த செய்தி நிறுவனம், இந்த முறை கோவை மாவட்டத்திற்கான கணிப்பை வெளியிட்டு உள்ளது.
இப்போது தேர்தல் நடந்தால் கோவையில் தேர்தல் குறித்த மக்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்ற கணிப்பில் பின்வரும் தகவல்கள் இடம்பெற்று உள்ளன
திமுக கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகள்
திமுக கூட்டணி கோயம்புத்தூர் (வடக்கு) மற்றும் கோயம்புத்தூர் (தெற்கு) தொகுதிகளில் வெற்றி பெறும்.
திமுக கூட்டணி மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் வெற்றி பெறும்.
திமுக கூட்டணி கிணத்துக்கடவு, பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் வெற்றி பெறும்.
அதிமுக கூட்டணி வெற்றி பெறும் தொகுதிகள்
அதிமுக கூட்டணி தொண்டாமுத்தூரில் வெற்றி பெறும்
அதிமுக கூட்டணி சூலூர் தொகுதியில் வெற்றி பெறும்.
அதிமுக கூட்டணி சிங்காநல்லூரில் வெற்றி பெறும்.
கோவை மாவட்டத்தின் கீழ் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் திமுக கடந்த 2021 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் 2026 தேர்தலில் இதில் 7 தொகுதிகளில் இந்த முறை திமுக வெற்றிபெறும் என்று அக்னி செய்தி நிறுவனம் கணிப்பு வெளியிட்டு உள்ளது.
கோவை திமுக பிளான்
2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, மேற்கு தமிழ்நாட்டை, குறிப்பாக கோயம்புத்தூரை, திமுக தீவிரமாக குறி வைத்து வருகிறது. அதிமுக கோட்டையாகவும், பாஜக வளரும் தளமாகவும் கருதப்படும் கொங்கு மண்டலத்தில், சாதி வாரியான வாக்குகள், உள்ளூர் பிரச்சனைகள், தொழில்முனைவோருக்கான திட்டங்கள் அதிகம் கவனம் பெறுவது வழக்கம்.
2021 சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் 234 தொகுதிகளில் 133-ல் வென்று ஆட்சி அமைத்தபோதிலும், மேற்கு தமிழ்நாட்டின் 68 தொகுதிகளில் வெறும் 24 இடங்களில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. கோயம்புத்தூரில் திமுக ஒரு தொகுதியிலும் வெல்லவில்லை; அதிமுக 9 இடங்களிலும், பாஜக ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.
2021 முதலே களப்பணிகளை மேற்கொண்டாலும், கடந்த சில மாதங்களில் மேற்குப் பகுதியில் கணிசமான அரசியல் முதலீடுகளை திமுக செய்துள்ளது. கோவையில் தொழிலதிபர் ஜி.டி. நாயுடு பெயரில் மேம்பாலம், ஸ்ரீ அன்னபூர்ணா உணவக சங்கிலியின் இயக்குநர் டி. சீனிவாசன் தமிழ்நாடு அரசு உணவு ஆணையத்தில் உறுப்பினராக நியமனம் ஆகியவை நாயுடு சமூகத்தினரால் வரவேற்கப்பட்டுள்ளன.
அதேபோல, முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி (கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்) கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் கோவை தொகுதிக்கே மாற உள்ளார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ராஜ் கவுண்டர் நடத்திய புதிய திராவிடக் கழக மாநாட்டில் பங்கேற்றதும் களத்தில் பலனளிப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
Mano Thangaraj: அமைச்சர் மனோ தங்கராஜுக்கு சீட் இல்லை.. கைவிரித்த திமுக தலைமை.. இதுதான் காரணமா? -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
ஓ.பன்னீர்செல்வத்துக்கு போடி.. வைத்திலிங்கம், மனோஜ் பண்டியனுக்கு எந்த தொகுதி? விவரம்! -
தலைநகர் சென்னையை மொத்தமாக அள்ள திமுக பிளான்.. 15 தொகுதிகளில் நேரடி போட்டி! 1ல் காங்கிரஸ்! -
Alangulam: ஆலங்குளத்தில் பூங்கோதைக்கு ஏமாற்றம்.. மனோஜ் பாண்டியனுக்கு வாய்ப்பு! நேரடியாக மோதும் திமுக vs அதிமுக! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் இறுதியானது.. திமுக தலைமையகத்தில் சுதீஷ் சொன்ன சேதி! -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
கட்டுக்கட்டாக பணம்.. சென்னையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் நிறுவன காரில் ரூ.60 லட்சம் பறிமுதல் -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்?












Click it and Unblock the Notifications