ஆளுநரையே அவமதிச்சுட்டாங்க..ஆட்சியைக் கலைங்க! சட்டப்பிரிவு 356 .. ஐடியா கொடுக்கும் அர்ஜுன் சம்பத்!
திருப்பூர் : அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு சீர்கேடு , ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், பிரிவினைவாத ஆதரவு உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முன் தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. ஏற்கனவே திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இன்று பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது.
எதிர்பார்த்தது போலவே ஆளுநரின் உரையை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தன. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.

ஆளுநர் ஆர்.என்.ரவி
தொடர்ந்து முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே ஆளுநர் வெளியேறியது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஆளுநருக்கு உரிய மரியாதை அளிக்கவில்லை என பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளும், சபை மாண்பை ஆளுநர் புறக்கணித்ததாக திமுக மற்றும் கூட்டணி கட்சிகளும் குற்றம் சாட்சி வருகின்றன. அதே நேரத்தில் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஆளுநர் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாகக் கூறப்படுகிறது.

அர்ஜுன் சம்பத்
இந்நிலையில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு சீர்கேடு , ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், பிரிவினைவாத ஆதரவு உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரரான கொடிகாத்த குமரனின் 91 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அவமதிப்பு
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் குமரன் நினைவகத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . இந்நிகழ்வில் கலந்து கொள்ள வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் திருப்பூர் குமரன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் . பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்," தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் அவமரியாதை செய்யப்பட்டிருப்பதன் மூலம் தமிழக சட்டமன்றத்தின் மாண்பு கெடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டமே அவமதிப்பு செய்யப்பட்டு இருக்கிறது.

சட்டப்பிரிவு 356
திமுக தனது கொள்கைகளை ஆளுநர் உரையில் வாசிப்பதற்காக எழுதிக் கொடுத்ததை ஆளுநர் பதவியின் மாண்பை பாதுகாக்கும் வகையில் ஆளுநர் சில வரிகளை தவிர்த்து இருக்கிறார். ஆளுநரை அவையில் வைத்துக்கொண்டு அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக அவர் வெளியேறி இருக்கிறது. உடனடியாக அரசியலமைப்பு சட்டப்பிரிவு 365 படி தமிழக சட்டமன்றத்தை முடக்கி வைக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி சட்டம் ஒழுங்கு சீர்கேடு , ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், பிரிவினைவாத ஆதரவு உள்ளிட்ட காரணங்களுக்காக தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications