"ஆனா, இது புதுசுண்ணே".. கொத்து கொத்தாக சேர்களை தூக்கி சென்ற மக்கள்.. அதிமுக கூட்டத்தில் சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற அதிமுக கட்சி பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சி தொண்டர்கள் கூட்டம் முடிந்து சென்ற போது, தாங்கள் அமர்ந்து இருந்த சேரை வீட்டிற்கு தூக்கிச்சென்ற சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக நாற்காலி இலவசம் என சொல்லப்பட்டதால், கூட்டத்தில் பங்கேற்றவர்கள் எடுத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் அதிமுகவின் 53-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தை அக்கட்சியினர் நடத்தி வருகிறார்கள். இந்த பொதுக்கூட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். அந்த வகையில், நேற்று இரவு திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் அதிமுகவின் 53 ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

tirupur aiadmk offbeat

இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சரோஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் கலந்து கொண்ட மக்கள், கூட்டம் நிறைவு பெற்றதும் தாங்கள் அமர்ந்து இருந்த சேர்களை கையோடு தூக்கி சென்றனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கூட்டத்திற்கு ஆள் சேர்க்க, பங்கேற்பவர்களுக்கு நாற்காலி இலவசம் எனக் கூறியதாகவும், இதனால், கூட்டம் முடிந்ததும் ஆளுக்கொரு சேரை எடுத்துக்கொண்டு சென்றதாகவும் சொல்லபடுகிறது.

tirupur aiadmk offbeat

முன்னதாக இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். திமுக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை எனவும் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளதாகவும் கடுமையாக விமர்சித்து பேசினார். முன்னாள் அமைச்சர் பேசி முடித்ததும் சேர்களை கையோடு எடுத்துக்கொண்டு கூட்டத்தில் பங்கேற்றவர்கள் சென்றனர்.

tirupur aiadmk offbeat

பொதுக்கூட்டம் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் வாழை மரங்கள் கட்டப்பட்டு இருந்தால் அதில் உள்ள வாழைதார்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை கட்சி பாகுபாடு இன்றி அனைத்து கட்சி கூட்டங்களிலும் தொண்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு தூக்கி செல்லும் காட்சிகள் அவ்வப்போது வெளியாகும். ஆனால், தற்போது தாங்கள் அமர்ந்த இருக்கைகளையே கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தூக்கிச்சென்றதால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் அப்பகுதி மக்களும் வியப்புடன் பார்த்து சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+