கருப்பு சம்பவம் கோவையில்! போதையை தமிழக அரசு ஒழிக்கணும்! போலீஸின் ரோந்து பணி அவசியம்: இந்து முன்னணி
திருப்பூர்: "பெண் குழந்தைகளை பெற்றோர், மிகுந்த கண்காணிப்போடு வளர்க்க வேண்டிய பொறுப்பை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன. ஆண் குழந்தைகளின் நட்பு வட்டத்தையும், கவனித்து திருத்தும் கடமையை பெற்றோர் உணர வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் சிறு வயது முதலே நல்ல பண்புகளை கற்றுத்தர வேண்டும்" என்று கோவை மாணவி சம்பவ வழக்கில் இந்து முன்னணி கூறியிருக்கிறது.
கோவை ஏர்போர்ட் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகரை ஒட்டிய காட்டுப் பகுதியில், 2 நாட்களுக்கு முன்பு, இரவு 11 மணிக்கு மாணவி ஒருவர், தன்னுடைய ஆண் நண்பருடன் காரில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் 3 இளைஞர்கள் வந்து, திடீரென காரை அடித்து நொறுக்கியதுடன், கண்ணாடியை உடைத்து, மாணவியின் ஆண் நண்பரை ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இதில், கடுமையாக காயமடைந்த ஆண் நண்பர் மயங்கி கீழே விழுந்துள்ளார். பிறகு அந்த கும்பல் மாணவியை காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
கோவை ஏர்போர்ட் மாணவி
பின்னர், மயக்கம் தெளிந்த ஆண் நண்பர், உடனடியாக போலீசுக்கு புகார் தந்துள்ளார்.. விரைந்து வந்த போலீசார் மாணவியை மீட்டு சிகிச்சையில் அனுமதித்துள்ளனர்.. பிறகு தப்பிச்சென்ற குற்றவாளிகளை தேட தனிப்படை அமைத்து, நேற்று முன்தினம் இரவோடு இரவாக 3 பேரையுமே சுட்டுப் பிடித்துவிட்டனர்.
கோவையில் மாணவி மீது நடந்த இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுகி எடுத்து வருகிறது.. இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினருமே கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில், இந்து முன்னணியும் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இந்து முன்னணி கண்டனம்
இதுகுறித்து, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோவையில் கல்லுாரி மாணவி ஒருவர், பாலியல் கொடூரத்துக்கு ஆளானது, தமிழகத்தை தலைகுனிய வைத்திருக்கிறது. எல்லா வகையான குற்றங்களுக்கும், போதை மிக முக்கிய காரணியாக உள்ளது.
இதுபோன்ற கொடூர குற்றத்தில் இருந்து சமூகமும், அரசும், காவல்துறையும் பாடம் கற்க வேண்டும். மீண்டும் இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.
ஆர்எஸ்எஸ் - ஐந்தமுதம்
பெண் குழந்தைகளை பெற்றோர், மிகுந்த கண்காணிப்போடு வளர்க்க வேண்டிய பொறுப்பை இதுபோன்ற சம்பவங்கள் உணர்த்துகின்றன.ஆண் குழந்தைகளின் நட்பு வட்டத்தையும், கவனித்து திருத்தும் கடமையை பெற்றோர் உணர வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் சிறு வயது முதலே நல்ல பண்புகளை கற்றுத்தர வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டில் சமூக மாற்றத்துக்கான "ஐந்தமுதம்" என்ற கருத்தை முன்னெடுக்கிறது. அதில், ஒன்று குடும்ப ஒற்றுமை. தினசரி ஒரு வேளையாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி அளவளாவி கருத்து பரிமாற்றத்தின் வாயிலாக சமூக உணர்வை வளர்ப்பது.
எல்லாருக்குமே பொறுப்பு
உண்மையில், குடும்பங்களில் இன்று இது மிக மிக அவசியமானது. இதன் மூலம், ஒருவருக்கு, ஒருவர் பரபஸ்பரம் அன்பும், நம்பிக்கையும், பண்பும் உறுதிபடும்.
தமிழக அரசு போதையை ஒழிக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக பொறுப்பற்றவர்களை கண்காணித்து சீர்படுத்த காவல்துறை முனைந்து செயல்பட வேண்டும். அதற்கு காவல்துறையின் ரோந்து பணி அவசியமானது.
தமிழகத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் இதுபோன்ற காட்டுமிரண்டித்தனமான குற்றம் நடைபெறாமல் இருக்க, எல்லோருக்கும் பொறுப்பு இருப்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications