NHல் நடு ரோட்டில் TN 43.. சீல் வைக்கப்பட்ட ‘மர்ம கண்டெய்னர்’.. நிறுத்திவிட்டு எஸ்கேப்பான டிரைவர்!
திருப்பூர் : பல்லடத்தில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்றை நடுரோட்டில் நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்டெய்னர் சீல் வைக்கப்பட்டிருப்பதால் உள்ளே என்ன இருக்கிறது என்பதில் மர்மம் நிலவுகிறது.
Recommended Video
திருப்பூர் மாவட்டம் பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அரசு மருத்துவமனை முன்பாக TN 43 பதிவு எண் கொண்ட கண்டெய்னர் லாரி ஒன்று நடுரோட்டில் பிற வாகனங்கள் செல்ல இயலாத நிலையில் அடைத்து நிறுத்தப்பட்டிருந்தது. கண்டெய்னர் லாரி அங்கிருந்து நகராததால், வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசார் சென்று பார்த்தபோது, ஓட்டுநர் இருக்கையில் ஆள் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மணிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் இந்த திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த மர்ம கண்டெய்னர் லாரி நடு வழியில் நிறுத்தப்பட்டிருந்ததும், டிரைவர் வாகன ஓட்டுநர் இருக்கையில் இல்லாததும் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளன. இந்த லாரி நடு வழியில் நிறுத்தப்பட்டிருந்ததால், வாகன ஓட்டிகள் பல்லடத்தைக் கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேலானது. தொடர்ந்து பொதுமக்களின் உதவியுடன் பல்லடம் போலீசார் அந்த கண்டெய்னர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த கண்டெய்னர் சீல் வைக்கப்பட்டிருப்பதால் உள்ளே இருப்பது என்ன என்பதில் மர்மம் நிலவுகிறது. கண்டெய்னர் லாரியை ஓட்டிவந்த டிரைவர் நடு வழியில் லாரியை நிறுத்திவிட்டு ஓடியது ஏன் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே போன்ற கண்டெய்னர் லாரி ஒன்று தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் காவல்துறையினரின் சோதனையில் சிக்கியது. அதில் சரக்கு எதுவும் இல்லாமல் காலியாக இருந்ததால் சந்தேகமடைந்த காவல்துறையினர் லாரியின் உள்ளே ஏறி சோதனை செய்தனர்.
அப்போது, அந்த லாரியில் ரகசிய அறை இருப்பதை கண்டுபிடித்தனர். அதனை உடைத்துப் பார்த்தபோது, அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. திருப்பூர் பல்லத்தில் நின்ற லாரியிலும் அப்படி ஏதும் இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications