நாதக கார்த்திகாவை கைது செய்தது ஏன்? காவல் துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கார்த்திகா உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து காவல்துறை விளக்கமளித்துள்ளது. கார்த்திகா கைதை அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்து வரும் நிலையில் போலீஸ் விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து போலீஸ் விளக்கம் அளிக்கையில், "தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் அவருடன் இருந்தவர்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டனர். கடந்த 2ஆம் தேதி உடுமலைப்பேட்டை - தாராபுரம் சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் பிளக்ஸ் பேனரை அகற்றுமாறு காவல்துறையினர் பலமுறை எச்சரித்தனர்.

NTK Karthiga

இருப்பினும், அதனை அகற்றவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், காவல்துறையினரிடம் தகாத வார்த்தைகளைப் பேசியதாக சஞ்சய் காந்தி மற்றும் ஷேக் பரித் ஆகியோர் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குப் பதிவைக் கண்டித்து கார்த்திகா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். இதையடுத்து, அனுமதியின்றி ஒன்றுகூடியது, பொதுமக்களுக்கும் வாகனப் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியது, காவல்துறையினரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, தகாத வார்த்தைகளைப் பேசியது மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கார்த்திகா உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கடந்த 4ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் துண்டை அணிந்திருந்த நபரையும் அவரது மனைவியையும் கார்த்திகா தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதே நாளில் முதலமைச்சரின் வருகையின்போது, அனுமதியின்றி திடீரெனக் கூடி இடையூறு ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாகக் கூறி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா மற்றும் 57 பேர் மீது மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+