பயங்கரம்.. செலவுக்கு பணம் தர மறுத்த தாய்.. நெஞ்சிலேயே கத்தியால் குத்தி கொன்ற மகன்!

பெற்ற தாயை கத்தியால் குத்தி கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    செலவுக்கு பணம் தர மறுத்த தாய்..கத்தியால் குத்தி கொன்ற மகன்!- வீடியோ

    திருப்பூர்: செலவுக்கு பணம் தர மறுத்த ஆத்திரத்தில், அம்மாவை கத்தியை எடுத்து நெஞ்சு, வயிறு பகுதிகளில் சரமாரி குத்தி கொலை செய்துள்ளார் மகன்!

    திருப்பூர் மணியக்காரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியமேரி. வயது 45 ஆகிறது. 2 மகள்களும், 22 வயதில் அர்ஜீத் என்ற மகனும் உள்ளனர்.

    ஒரு மகளுக்கு கல்யாணமாகிவிட்டது. இன்னொரு மகள், கோவையில் தங்கி ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கணவனை இழந்த ஆரோக்கியமேரி, மகன் அர்ஜீத்துடன் தங்கி வருகிறார்.

    பணம்

    பணம்

    அர்ஜீத் எந்த வேலைக்கும் போவதில்லை. ஆரோக்கியமேரி கணவரின் பின்னலாடை உற்பத்தி நிறுவனத்தை எடுத்து நடத்தி வந்தார். அதனால் அடிக்கடி அம்மாவிடம் செலவுக்கு பணம் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார். நேற்றுகூட வழக்கம்போல, செலவுக்கு பணம் கேட்டதற்கு, ஆரோக்கியமேரி பணம் தர மறுத்துள்ளார்.

    ஆத்திரம்

    ஆத்திரம்

    இதனால் ஆத்திரம் அடைந்த அர்ஜீத், கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து வந்து குத்தி விடுவேன் என்று சொல்லி மிரட்டி பணம் கேட்டுள்ளார். இதை கண்டு அதிர்ச்சியான ஆரோக்கியமேரி, கோவையில் உள்ள மகளுக்கு போன் செய்து, அர்ஜீத் தன்னை கத்தியை எடுத்து குத்திவிடுவதாக மிரட்டுகிறார் என்று சொல்லி அழுதார்.

    பால்கனி

    பால்கனி

    இதனால் இன்னும் ஆவேசம் அடைந்த அர்ஜீத், ஆரோக்கிய மேரியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டார். வயிறு மற்றும் நெஞ்சில் கத்தி குத்துப்பட்ட நிலையில், வலியால் அலறி துடித்து ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார் ஆரோக்கியமேரி. அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் அர்ஜீத் யாராவது என்கிட்ட வந்தால், வீட்டு மாடியில் இருந்து குதித்துவிடுவேன் என்று சொல்லி 2-வது மாடி பால்கனியில் போய் நின்று கொண்டார்.

    மனநிலை பாதிப்பு?

    மனநிலை பாதிப்பு?

    இந்த சம்பவம் குறித்து திருப்பூர் ஊரக போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டதும், விரைந்து வந்து, ஆரோக்கிய மேரியின் உடலை மீட்டதுடன், அர்ஜீத்தையும் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அர்ஜீத் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும், அதனால்தான் வேலைக்கு செல்லாமல் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து, ஆத்திரத்தில் கொலையும் செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+