திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவிநாசி "சென்டிமென்ட்டை" அடித்து, உடைத்து தள்ளிய தனபால்.. அசத்திய அதிமுக

Google Oneindia Tamil News

திருப்பூர்: அவிநாசி (தனி) சட்டசபை தொகுதியில், மீண்டும், வெற்றி பெற்றிருப்பதன் மூலம் நீண்ட காலமாக நிலவி வந்த சென்டிமென்ட்டை உடைத்துள்ளார் சபாநாயகர் தனபால். மேலும் அவர் 7வது முறையாக எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள, அவிநாசி தொகுதி வித்தியாசமான சென்டிமென்ட் உள்ள தொகுதி.

2001-இல் வெறும் 4 பேர்.. 2021-இல் அதே 4 பேர்.. 15 ஆண்டு கழித்து இது எப்படி சாத்தியம்? 2001-இல் வெறும் 4 பேர்.. 2021-இல் அதே 4 பேர்.. 15 ஆண்டு கழித்து இது எப்படி சாத்தியம்?

இதுவரை சட்டசபை தேர்தலில் ஒரே வேட்பாளர் இரண்டாவது முறை போட்டியிட்டால், தோல்வி அடைந்து விடுவர் என்று அந்த தொகுதிக்கு ஒரு சென்டிமென்ட் உள்ளது. ஆனால் இதை அதிமுக வேட்பாளர் தனபால் உடைத்துள்ளார்.

தனபால் வெற்றி

தனபால் வெற்றி

அதிமுக வேட்பாளரான ப.தனபால் 1,16,674 வாக்குகளும், ஆதி தமிழா் பேரவை வேட்பாளா் அதியமான் ராஜு 65,513 வாக்குகளும் பெற்றதால், 51,161 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார் தனபால். நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த சோபா 13,211 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் ஏ.வெங்கடேஸ்வரன் 8,318 வாக்குகளும், தேமுதிக வேட்பாளா் கே.மீரா 2,554 வாக்குகளும் பெற்றனா்.

ஒருமுறைதான் திமுக

ஒருமுறைதான் திமுக

அவிநாசி (தனி) சட்டபை தொகுதியில், கடந்த, 1971 முதல், இதுவரை, 12 முறை சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. 1984 முதல் 2016 வரை, 8 முறை நடந்த சட்டசபை தேர்தலில், 1996ம் ஆண்டு மட்டும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.

8 தேர்தல் வெற்றிகள்

8 தேர்தல் வெற்றிகள்

1984, 1989, 1991, 2001, 2006, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுகதான் வென்றது. 8 தேர்தல்களாக தொடர்ச்சியாக அவிநாசியை வென்றுள்ளது அதிமுக.

சென்டிமென்ட்

சென்டிமென்ட்

தனபால், இரண்டாவது முறையாக அவிநாசி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அவர் 7வது முறையாக எம்எல்ஏவாக தேர்வாகியுள்ளார். மேலும் சிட்டிங் எம்எல்ஏ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்ற சென்டிமென்ட்டை உடைத்தார் தனபால்.

English summary
Speaker Dhanapal has broken long-standing sentiment by winning the Avinashi (reserve) Assembly constituency, again. He has also been elected MLA for the 7th time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X