யூடியூபர்களுக்கு செக்.. தயாரிப்பாளர் சங்கத்திடம்.. திருப்பூர் சுப்பிரமணியம் வைத்த முக்கிய கோரிக்கை
திருப்பூர்: நடிகை நயன்தாரா திருமண டாக்குமென்டரி விவகாரம், கங்குவா திரைப்படப் பிரச்னை என தமிழ் திரையுலகமே அனல் பறந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே சினிமா தயாரிப்பாளர்களிடம் முக்கிய கோரிக்கை வைத்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள ஆடியோ வைரலாகி வருகிறது.
இயக்குநர் சிவா இயக்கத்தில், ஞானவேல்ராஜா தயாரிப்பில், சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தில் திஷா பதானி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திரைக்கு வரும் சூர்யாவின் படம் என்பதாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட பொருட் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் கதை தற்போது மற்றும் 1070களில் நடப்பது போன்று எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் படம் பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. சமூக வலைதளங்களைத் திறந்தாலே கங்குவா திரைப்படம் குறித்து பொதுமக்கள் புலம்பும் மற்றும் திட்டும் காட்சிகள் அதிர்ச்சிகரமாக உள்ளது. சூர்யாவையும், படக் குழுவினரையும் பலரும் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.
படத்தின் இரைச்சல் குறித்து பலரும் எதிர்மறையாக கூறியதால் சப்தத்தை குறைக்கும் முடிவை படக் குழுவினர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், கங்குவா தொடர்பான நெகட்டிவ் விமர்சனங்கள் பரவி வருகிறது. படத்தின் விமர்சனத்தை முதலிலேயே பரப்புவதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக தியேட்டர் உரிமைாயளர்களும் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே, யூடியூபர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என சினிமா தயாரிப்பாளர்களிடம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத் தலைவராக உள்ள திருப்பூர் சுப்பிரமணியம் ஆடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அதில், தமிழகத்தில் புது படங்களுக்கான சிறப்புக் காட்சிகள் 9 மணிக்கு போடப்படுகிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் அதிகாலையிலேயே படம் ஆரம்பமாகிறது. எனவே, மற்ற மாநிலங்களிலும் சிறப்புக் காட்சிகளை 9 மணிக்கே ஆரம்பிக்க வேண்டும்.
அதேபோல, படம் வெளியாகிய இரண்டு வார காலத்துக்கு சினிமா விமர்சனங்களை யாரும் செய்யாமல் இருக்கும் வகையில் தடையை பெற வேண்டும் என்றும் இரண்டு கோரிக்கைகளை வைத்துள்ளார். பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் படங்களை அதிகாலையிலேயே பார்த்துவிட்டு, தமிழகத்தில் திரைப்படம் போடப்படுவதற்கு முன்னரே விமர்சனம் என்கிற பெயரில் யூடியூப் மூலமா காலி செய்கின்றனர்.
சமீபகாலமாக இதுபோன்ற விமர்சனங்களுக்கு ஒரு வரையறை இல்லாமல் உள்ளது. அதேபோல, தியேட்டர் வளாகங்களுக்குள் ரசிகர்களின் கருத்தை வீடியோ எடுப்பதையும் அனுமதிக்க கூடாது. இந்த கட்டுப்பாட்டை விதித்துவிட்டு அதனை நாமே தற்போது மீறி வருகின்றோம். வரும்காலங்களில் இதுபோன்று வீடியோ எடுக்க அனுமதிக்க கூடாது.
கேரள மாநிலத்தில் அண்மையில் ஒரு தயாரிப்பாளர் கோர்ட்டை அணுகி தன்னுடைய படங்களுக்கு விமர்சனம் செய்ய தடை வாங்கியது குறித்து கேள்விப்பட்டேன். அதேபோல, தயாரிப்பாளர் சங்கமும் தடை பெற வேண்டும். இந்த ஆண்டு இந்தியன் 2, வேட்டையன், கங்குவா ஆகிய படங்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானதால் தான் மக்கள் தியேட்டருக்கு வருவதில் பாதிப்பு ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications