செல்போனால் வந்த வினை.. திருப்பூரில் கல்லூரி மாணவர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை! பிளஸ் டூ மாணவன் கைது

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் செல்போன் கொடுக்கல் வாங்கலில் 12 ஆம் வகுப்பு மாணவன் கல்லூரி மாணவர் ஒருவரை பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உங்க கூட தனியாக பேச வேண்டும் என அழைத்து சென்று கத்தியால் வெட்டி கொன்றுள்ளார். இது தொடர்பாக 12 ஆம் வகுப்பு மாணவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருப்பூர் அவினாசிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் ஸ்ரீஹரி (வயது 19). இவர் திருப்பூர் ஏபிடி ரோடு இந்திராநகர் புளியமரத்தோட்டம் பகுதியில் வசித்து வந்தார். இவரது தந்தை திருப்பூரில் பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். ஸ்ரீஹரி தன் பாட்டி பழனியம்மாளுடன் பராமரிப்பில் இருந்து வந்தார்.

Tiruppur College student hacked to death in broad daylight Class 12 student arrested

நேற்று மதியமும் ஸ்ரீஹரி தனது பாட்டியுடன் வீட்டில் இருந்தார். அப்போது மதியம் 2 மணி அளவில் 16 வயது சிறுவன் ஒருவன் ஸ்ரீஹரி வீட்டுக்கு வந்தான். ஸ்ரீஹரியை பார்த்ததும், உங்களிடம் தனியாக பேசனும்.. கொஞ்சம் வெளியே வாங்க என்று கூறியிருக்கிறார். இதையடுத்து ஸ்ரீஹரியும் சிறுவனும் நடந்து சென்றபடியே பேசினர். இந்நிலையில் திடீரென பயங்கரமாக அலறல் சத்தம் கேட்டது.

இதனால் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது நடுரோட்டில் ரத்த வெள்ளத்தில் ஸ்ரீஹரி உயிருக்கு போராடினார். அவரது கை, கால்களில் வெட்டு காயங்கள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஸ்ரீஹரியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்ரீஹரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த 16 வயது மதிக்கத்தக்க மாணவன் யார் என்றும், அவர் ஏன் ஸ்ரீஹரியை கொலை செய்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணையை தொடங்கினர். இதில், ஸ்ரீஹரியின் வீட்டுக்கு வந்து அவரை வெளியே அழைத்துச்சென்றது, தென்னம்பாளையத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுவன் என தெரியவந்தது.

இதையடுத்து சிறுவனை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் செல்போன் பிரச்சினையால் அவரை கொன்றது தெரியவந்தது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீஹரியிடம் இருந்து காசு கொடுத்து ஒரு செல்போனை சிறுவன் வாங்கி இருக்கிறான். ஆனால் வாங்கிய சில நாட்களிலேயே அந்த செல்போன் சரிவர வேலை செய்யாமல் போனது. இதனால் செல்போனை ஸ்ரீஹரியிடம் கொடுத்து பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு கூறியிருக்கிறான்.

ஆனால் நீ வாங்கும் போதே பார்த்து வாங்கியிருக்க வேண்டும் எனவும், காசு கொடுக்க முடியாது எனவும் கூறிவிட்டதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த சிறுவன், வீட்டில் இருந்து கத்தியை எடுத்து மறைத்து வைத்துக்கொண்டு சம்பவத்தன்று ஸ்ரீஹரி வீட்டுக்கு வந்து இருக்கிறான். அப்போது மரியாதையாக செல்போனை வாங்கிக்கொண்டு பணத்தை திருப்பி கொடு என கேட்டு இருக்கிறார்.

இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் பலியானது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+