திருப்பூரில் அரசு பள்ளி பாப்பாள் நினைவிருக்கா? அவிநாசி தீண்டாமை கேஸில் நீதிபதி தந்த தண்டனையை பாருங்க
திருப்பூர்: பாப்பாள் சத்துணவு சமைத்தால், நாங்கள் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடமே அனுப்ப மாட்டோம் என்று ஆதிக்க சாதியினர் அன்று சொன்னது நினைவிருக்கா? இது தொடர்பாக 7 வருடங்களாக திருப்பூர் மாவட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது... 70 முறைக்கும் மேல் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.. ஆனால், ஒருவழியாக தற்போது அதிரடியான தீர்ப்பு தரப்பட்டுள்ளது. அது என்ன?
கடந்த 2018ல் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் தலித் பெண் பாப்பாள் சமையலராக பணி நியமனம் செய்யப்பட்டார்.

இதனால் அந்த ஊர் ஆதிக்க சாதியினர் பாப்பாள் சத்துணவு சமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பந்தப்பட்ட பள்ளியை முற்றுகையிடவும், பாப்பாள் அரசுப் பள்ளியில் சமையலராக வேலை செய்வதில் தடை ஏற்பட்டது. அதுமட்டுமல்ல, பாப்பாள் சத்துணவு சமைத்தால் சமைத்தால், நாங்கள் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கூடம் அனுப்ப மாட்டோம் என்று அந்த ஊர் ஆதிக்க சாதியினர் கூறினார்கள்.
பாப்பாள் சமைத்த சாப்பாட்டில் பல்லி?
இதனால், அவினாசி வட்டார வளர்ச்சி அலுவலர் பாப்பாளை வேறு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். அந்த நேரத்தில் தபெதிக, விசிக மற்றும் தலித் அமைப்புகள் பாப்பாளுக்கு ஆதரவாகவும் பள்ளியில் நிலவும் சாதி பாகுபாட்டை எதிர்த்தும் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து பாப்பாள் மீண்டும் அதே பள்ளியில் சமையலராக நியமிக்கப்பட்டார்.
பிறகு, பள்ளியின் தலைமை ஆசிரியை சசிகலா, சத்துணவில் பல்லி விழுந்திருப்பதாகக் கூறி மாணவர்களை சாப்பிடாமல் தடுத்தார்.. ஒரு மாணவியின் தட்டில் மட்டும் இறந்துபோய் காய்ந்த நிலையில் பல்லி ஒன்று கிடந்ததாக புகார் கிளம்பி, சத்துணவு சாப்பிட்ட 12 மாணவர்களுக்கும் அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை தரப்பட்டு, சசிகலா மீது பாப்பாளும், பாப்பா மீது சசிகலாவும் மாறி மாறி புகார்களை தந்து மிகப்பெரிய பரபரப்பு அன்றைய நேரத்தில் நடந்ததை தமிழகம் மறக்க முடியாது.
சாதியை சொல்லி திட்டி...
அதுமட்டுமல்ல, அரசுப்பள்ளி சமையலரை சாதியைச் சொல்லி அவமானப்படுத்தியும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகக் கூறி, இந்த சம்பவம் மாநில அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.. இது தொடர்பாக பாப்பாள் அளித்த வன்கொடுமை புகார் தொடர்பாக சேவூர் போலீஸார் 36 பேர் மீது வழக்கு பதிந்தனர்.
இதில் குற்றவாளியாகக் சேர்க்கப்பட்டிருந்த அன்றைய வட்ட வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, சென்னை கோர்ட்டில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி ஜாமீன் பெற்றிருந்தார். அதன்படி ஹைகோர்ட்டிடன் சிறப்பு அதிகாரத்தின்படி, மீனாட்சி விடுவிக்கப்பட்டார்... 4 பேர் இறந்துவிட்டனர். மற்ற 31 பேர் மீது வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட எஸ்சிஎஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
பாப்பாள் முகத்தில் மகிழ்ச்சி
இந்த வழக்கில் நீதிபதி எம்.சுரேஷ் தற்போது தீர்ப்பு தந்துள்ளார்.. இதில் 31 பேர் கொண்ட இந்த வழக்கில் 25 பேர் விடுவிக்கப்பட்டனர். பழனிச்சாமி, சக்திவேல், சண்முகம், வெள்ளியங்கிரி, துரைசாமி மற்றும் சீதாலட்சுமி ஆகிய 6 பேருக்கு தலா 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
தண்டனை பெற்ற 6 பேரும் கோவை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.. தீர்ப்பு வரப்போவதால், சமையலர் பாப்பாள், தன்னுடைய கணவர் பழனிசாமியுடன் கோர்ட்டுக்கு வந்திருந்தார்.
தீண்டாமைக்கு எதிரான ஒரு பாடம்
இந்த நீதிமன்ற தீர்ப்பானது பலராலும் வரவேற்கப்பட்டு வருகிறது.. இத்தீர்ப்புக்கு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மிகப்பெரிய வரவேற்பு தெரிவித்து உள்ளார்...
அதேபோல தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.. அதில், "திருப்பூரில் பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞராக பாண்டியன் நியமிக்கப்பட்டார்.
மூத்த வழக்கறிஞர் ப.பா. மோகன், வழக்கறிஞர் சையத் ஆகியோர் உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவும் திருமதி பாப்பாள் அவர்களுக்கு ஆதரவாக கடந்த எட்டாண்டுகளாக வழக்கை நடத்தி வந்தனர்.
சபாஷ் தீர்ப்பு
திருப்பூர் மாவட்ட வன்கொடுமை வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் இன்று பாப்பாள் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் 6 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளார்கள். இந்த தீர்ப்பு சாதிய மனோபாவத்தோடும் பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படுகிற தீண்டாமை வன்கொடுமைகளை நிகழ்த்துபவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் என நம்புகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 வருடங்களாக திருப்பூர் மாவட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் இதுகுறித்த விசாரணை நடைபெற்று வந்தது... 70 முறைக்கும் மேல் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.. ஒருவழியாக தற்போது தீர்ப்பு தரப்பட்டுள்ளது தமிழக மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications