திருப்பூர் ரிதன்யாவின் ஒருவனுக்கு ஒருத்தி.. "நாய் மாதிரி நடத்தறான்ப்பா".. 2025ஐ உலுக்கிச் சென்ற பெண்
திருப்பூர்: வரதட்சணையை வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என்றபோதிலும், தொடர்ந்து வரதட்சணை விவகாரங்கள் வெடித்தபடி உள்ளன.. வரதட்சணைக்கு எதிரான கடுமையான சட்டங்கள் நம்முடைய நாட்டில் இருந்தபோதிலும், வரட்சணைகள் தீரவில்லை.. இது புதிய வாழ்வு வேண்டும் வாழ வேண்டும் என்று பல கனவுகளுடன் காத்திருக்கும் புதுமணப் இளம் பெண்களையும் காவு வாங்கிவிடுகின்றன.. அந்தவகையில், இந்த 2025-ல் தமிழகத்தையே உலுக்கியெடுத்துவிட்டார் திருப்பூர் ரிதன்யா.. இந்த சம்பவத்தின் பின்னணியை சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த 27 வயது பெண் ரிதன்யா, வரதட்சணை கொடுமைக்கு ஆளானார்.. திருமணத்தின்போது 300 சவரனும், பிறகு, குழந்தை பிறப்பது உள்ளிட்ட பல்வேறு சடங்குகள் என சேர்த்து 200 சவரனும் என மொத்தம் 500 சவரன் போடுவதற்தாக ரிதன்யாவின் பெற்றோர் ஒப்புக் கொண்டார்களாம்.

200 சவரன் நகை - அந்தரங்கம்
பேட்டரி கார் 62 லட்சம் ரூபாய்க்கு வேண்டும் என்று மாப்பிள்ளை தரப்பில் கேட்கப்பட்டதாம்.. இப்படி மறைமுகமாகவே வரதட்சணை கேட்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. உடல்ரீதியாக, மன ரீதியாக பலவிதமான கொடுமைகளை அனுபவித்த ரிதன்யா, கடந்த மே 28ம் தேதி தன்னுடைய காரிலேயே விஷம் குடித்து உயிரை விட்டார்..
திருமணமான 78 நாட்களில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.. ரிதன்யா மரணம் தொடர்பாக சேவூர் போலீசார் வழக்குப்பதிந்து ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோரை கைது செய்தனர். ரிதன்யாவின் அப்பா அண்ணாதுரை, தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறை, நீதித்துறை மற்றும் அரசு உரிய விசாரணை மேற்கொண்டு எனது மகளின் இறப்புக்கு நீதி வழங்க வேண்டும், நீதி கிடைக்கும் வரை எனது சட்டப் போராட்டம் தொடரும் என்று கண்ணீருடன் கூறினார் ரிதன்யாவின் தந்தை..
ரிதன்யாவின் குரல்
சமூக நலத்துறை விசாரணைக்கு மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. மேலும், ரிதன்யா தற்கொலை வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, கைது செய்யப்பட்ட கவின்குமார் மற்றும் பெற்றோருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கப்பட்டது. எனினும் ரிதன்யா வழக்கின் நீதிமன்ற விசாரணை தொடர்ந்து நடந்தபடியே உள்ளது.
இதுஒருபுறமிருந்தாலும், இந்த சம்பவத்தில் ரிதன்யாவின் குரல் தமிழகம் முழுவதும் பரவி பலரையும் உலுக்கி எடுத்துவிட்டது.. தன்னுடைய தற்கொலைக்கு, கணவர் மற்றும் அவரது பெற்றோர்தான் காரணம் என்று கூறி, தற்கொலைக்கு முன்பு வாட்ஸ்அப்பில் வாய்ஸ் நோட் பதிவிட்டிருந்தார் ரிதன்யா..
நாய் மாதிரி நடத்தறான்
'மன்னிச்சுருங்கப்பா, நான் உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன், 'நாய் மாதிரி என்னை நடத்தறான்' என்றெல்லாம் ரிதன்யாவின் கண்ணீருடன் பேசியிருந்த ஆடியோ இணையத்தையே வலம் வந்து கொண்டிருந்தது..
அதுமட்டுமல்ல, திருமணம் முடிந்ததுமே தனக்கு நடந்த பாலியல் கொடுமைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் ரிதன்யா தவித்துள்ளார்.. அப்போதுதான் தன்னுடைய உறவுக்கார 11 வயது சிறுவனிடம், கணவர் தன்னை உடம்பு முழுக்க கடித்து பாலியல் துன்புறுத்தல் தந்ததை சொல்லி அழுதாராம் ரிதன்யா..
பிசினஸ் வுமன்
இதுபோக ரிதன்யாவை பற்றி வந்த தகவல்களும் பொதுமக்களுக்கு வியப்பை கூட்டியிருந்தது.. அதாவது ஃபேஷன் டிசைனிங் படித்து, ஆன்லைனில் ஆரி கிளாஸ் எடுத்து வந்துள்ளார் ரிதன்யா.. 2 மாத கிளாசுக்கு 9 ஆயிரம் கட்டணம் வாங்கியிருக்கிறார்,., ஆனால், பணவசதி இல்லாதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணத்தை மட்டுமே பெற்றுள்ளார்..
எம்எஸ்சி படித்து முடித்ததுமே யோகா படித்துள்ளார் ரிதன்யா.. பியூட்டிஷியன் கோர்ஸ் படித்துள்ளார்.. மெஹந்தி போடுவது, ஆரி வொர்க்குகள் போன்றவற்றையும் கற்று தேர்ந்துள்ளார்.. கார்டனிங் கற்றுள்ளார்,.. தங்கம் சம்பந்தமான கோர்ஸையும் படித்தாராம் ரிதன்யா,..
இவ்வளவு படிப்பை ஏன் படிக்க வேண்டும் என்று ரிதன்யாவின் தோழிகளிடம் கேட்டால், "திருப்பூர், அவிநாசி பகுதிகளிலுள்ள இல்லத்தரசிகளை, பிசினஸ் வுமன்களாக மாற்ற வேண்டும், அவர்களும் யாரையும் சார்ந்து வாழாமல் சுயமாக சம்பாதிப்பார்கள். அதனால்தான் இத்தனை கோர்ஸ் படித்துள்ளேன்" என்றாராம்.
பரிதாப ரிதன்யா
ரிதன்யாவின் அப்பழுக்கற்ற சிரிப்பு, ரிதன்யாவின் பொதுநல சிந்தனை, ரிதன்யாவின் கடைசி கதறல் பேச்சு போன்றவை இந்த தமிழகத்தையே கலங்கடித்துவிட்டு சென்றுவிட்டது.. திருப்பூர் ரிதன்யாவே கடைசி வரதட்சணை மரணமாக இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் நினைத்தாலும்கூட, அடுத்தடுத்த வரதட்சணை தற்கொலைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. ரிதன்யாவை நினைவுபடுத்தி கொண்டுதான் இருக்கின்றன.
மகளின் மரணத்துக்கு எப்படியாவது நீதி கிடைத்துவிட வேண்டும் என்று தன்னுடைய சட்ட போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார் ரிதன்யாவின் அப்பா.. ஆனாலும், இந்த 2025-ம் வருடத்தை யாராலும் மறக்க முடியாதபடி, கலங்கடித்து விட்டு சென்றுள்ளார் பரிதாப ரிதன்யா...!!












Click it and Unblock the Notifications