போலீஸ் ஸ்டேஷனிலும் தீராத பிரச்சனை.. நள்ளிரவில் தூங்கிய மனைவி! திருப்பூர் கணவன் செய்த அதிர்ச்சி செயல்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: மனைவி யாரிடமோ செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டேயிருந்தார்.. இதை பார்த்து ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கண்டித்துள்ளார். இதனால் தம்பதிக்குள் தகராறு வெடித்து.. ஒருகட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன் வரை புகார் சென்றது.. அப்போதும் பிரச்சனை தீரவில்லை. கடைசியில், கணவன் செய்த சம்பவம், திருப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜா.. 31 வயதாகிறது.. இவரது மனைவி ஆக்னேஸ் பவலி (26). இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Tiruppur Wife issue

திருப்பூர் தம்பதி

இவர்கள் திருப்பூர் வீரபாண்டி, திருக்குமரன் நகர் பகுதியில் வசித்து வந்தனர். கிறிஸ்துராஜா பிரிண்டிங் நிறுவனத்திலும், ஆக்னேஸ் பவலி பனியன் நிறுவனத்திலும் வேலை பார்த்து வந்தனர்.

ஆரம்பத்தில் குடும்பம் மகிழ்ச்சியாகவே சென்றது.. நாளடைவில் ஆக்னேஸ் பவலியின் நடவடிக்கையில் மாற்றம் தென்பட்டுள்ளது.. அடிக்கடி தனியாக சென்று செல்போனில் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தாராம்.. இதைப் பார்த்த கிறிஸ்துராஜா, யாரிடம் பேசுகிறாய் என்று மனைவியிடம் கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில், மனைவியின் நடத்தையிலும் கிறிஸ்துராஜாவுக்குச் சந்தேகம் வந்துள்ளது.

போனில் யார்

இதனால் கடந்த வாரம் கே.வி.ஆர். நகர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த கிறிஸ்துராஜா, தன்னுடைய மனைவி யாருடனோ போனில் பேசுவதாக புகார் கொடுத்துள்ளார்.

ஒவ்வொரு முறை போன் வரும்போதும், தன்னுடைய மனைவி அடிக்கடி தனியாகச் சென்றுவிடுவதாகவும், நீண்ட நேரம் பேசி கொண்டேயிருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து போலீசாரும், ஆக்னேஸ் பவலியை ஸ்டேஷனுக்கு அழைத்து அட்வைஸ் தந்து அனுப்பி வைத்தனர்.. ஆனாலும், அவர் செல்போனில் பேசுவதை நிறுத்தவில்லை என்று தெரிகிறது.

அம்மிக்கல்லுடன் நின்ற கணவர்

சம்பவத்தன்று இரவு மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர்களது மகனும் மகளும் வீட்டில் உள்ள இன்னொரு ரூமில் தூங்கிக் கொண்டிருந்தனர். அந்த நள்ளிரவிலும் மனைவி நீண்ட நேரம் செல்போனில் பேசி கொண்டிருந்தாராத்.. இதனால் கிறிஸ்துராஜா மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது.

பிறகு மனைவி தூங்க சென்றுவிட்டார்.. ஆனால் ஆவேசம் அடங்காத கிறிஸ்துராஜா, மனைவி தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் கிடந்த அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு விட்டாராம்.. இதில் தலை நசுங்கிய ஆக்னேஸ் பவலி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

3 நாளில் 3 கொலைகள்

இதைத்தொடர்ந்து, கிறிஸ்துராஜா ரத்தக்கறையுடன் வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார்.. என் மனைவி எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.. அதனால் கொன்று விட்டேன் என்று கூறி சரணடைந்தார். அவரைக் கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்த ஆக்னேஸ் பவலியின் உடல் போஸ்ட் மார்ட்டத்துக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தாயை இழந்ததுடன், தந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதால், அவர்களது 2 குழந்தைகளும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், தமிழகத்தில் நாளுக்கு நாள் வன்முறை சம்பவங்கள் பெருகுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. குறிப்பாக, இதே திருப்பூரில் 2 நாட்களுக்கு முன்பு வெட்டிக் கொல்லப்பட்டார்.. கல்லூரி மாணவர் ஒருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இப்படி 3 நாட்களுக்குள் 3 கொலைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்துள்ளதால், திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+