100 கோடி வாங்குனவங்களுக்கே வேலையில்லை! சிம்பு, எஸ்கே சும்மா இருக்காங்க! அதிரடியாகப் பேசிய பிரபலம்
திருப்பூர்: 100 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்கள் இன்று வேலை இன்றி வீட்டில் உள்ளார்கள் எனவும், சிறு நடிகர்கள் படத்திற்கு மக்களே வருவதில்லை. 10 முக்கிய நடிகர்கள் படத்திற்கு தான் மக்களே வருகிறார்கள் என தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்," 100 கோடி 150 கோடி என சம்பளம் வாங்கியவர்கள் இன்று பணி இன்றி வீட்டில் உள்ளனர். காரணம் அப்படி சம்பளம் கொடுத்த நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு படங்கள் முழுமையாக இல்லை.
இதற்கு காரணம் பெரிய நடிகர்கள் தான். 8 வாரம் கழித்து தான் ஓடிடி வெளியீடு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால் இதன் பாதிப்பு இன்று தெரிகிறது. எந்த நடிகருடைய படத்தையும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.

நடிகை சிகை அலங்கார நிபுணருக்கு 1 நாள் பேட்டா 25 ஆயிரம், ஹீரோ பவுன்சருக்கு பேட்டா, பெட்ரோல் என அனைத்தையும் தயாரிப்பாளரிடம் வசூலித்ததால் பல தயாரிப்பு நிறுவனங்கள் முடிந்து விட்டது. ஏ.வி.எம் போன்ற நிறுவனங்கள் இன்று சொந்த படம் எடுக்க விரும்புவதில்லை. தென்னிந்திய சினிமா அதள பாதாளத்தில் உள்ளது. இதனை சரி செய்ய தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என முத்தரப்பு நேரடி கூட்டம் நடத்தி ஆலோசரை செய்யப்படும்.
இனி நடிகர்களுக்கு சம்பளம் கிடையாது. விகிதாச்சார அடிப்படையில் தான் ஊதியம் என்பதே எங்கள் முடிவு. கமல், அஜித், சிம்பு , சிவகார்த்திகேயன் என பெரிய நடிகர்கள் படங்கள் எதுவும் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கிறார்கள். பி.வி.ஆர் குழுமம் கூட நஷ்டத்தில் தான் இயங்குகிறது. பெரிய ஹீரோக்கள் தயாரிப்பாளர்களை நல்ல படியாக வைத்துக் கொள்ளுங்கள், அநாவசிய செலவுகளை தவிர்த்தால் சினிமா தொழில் சிறக்கும். சிறு படங்கள் எடுப்பவர்கள் கூட கதைக் கருவை மையமாக வைத்து எடுக்கின்றனர்.
ஆனால் பெரிய படங்களில் நடிகர்களை மையப்படுத்தி எடுக்கிறார்கள். கர்ணன் , ஆயிரத்தில் ஒருவன், கில்லி, சச்சின் போன்ற ஒரு சில படங்கள் தான் ரீ ரிலிசில் சாதித்தன. இப்போதைய நடவடிக்கை மூலம் கூடுதல் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறோம். சிறு நடிகர்கள் படத்திற்கு மக்களே வருவதில்லை. 10 முக்கிய நடிகர்கள் படத்திற்கு தான் மக்களே வருகிறார்கள்." என கூறியுள்ளார்.
-
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
"பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா" பேசுகிறேன்.. தமிழ் சினிமாவின் போக்கையே மாற்றிய மாபெரும் இயக்குநர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications