மலர்ந்த சிரிப்போடு ரூ.70 லட்சம் மதிப்புள்ள வால்வோ காரில் பயணித்த ரிதன்யா.. வீடியோ காட்சிகளால் சோகம்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவிற்கு திருமணத்தின் போது கொடுக்கப்பட்ட நகைகள் மற்றும் வால்வோ கார் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (27) என்ற பெண்ணுக்கு கவின் குமார் என்பவருடன் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது திருமணத்தின்போது வரதட்சணையாக 300 பவுன் நகை, 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் மற்றும் 2 1/2 கோடி செலவில் திருமணம் செய்யப்பட்டது.

500 பவுன் வரதட்சணை தருவதாகச் சொல்லிவிட்டு 300 பவுன் மட்டும் கொடுத்ததாகவும் கவின்குமாருக்கு தொழில் துவங்கி தர வேண்டும் எனவும் மாமனார் மாமியார் வரதட்சணை கொடுமை செய்ததாகவும் கவின் குமார் கடுமையான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் செய்ததாலும் தன்னால் தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் தற்கொலை செய்து கொள்வதாக ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் அப் மூலம் ஆடியோ பதிவுகள் அனுப்பி வைத்துவிட்டு பூச்சி மருந்தை உட்கொண்டு காரில் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த ஆடியோ பதிவுகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கவின் குமார் அவரது தந்தை ஈஸ்வரமூர்த்தி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாமியார் சித்ரா தேவி உடல்நிலை காரணமாக பைண்டிங் ஆர்டர் முறையில் வீட்டு காவலில் உள்ளார்.
இந்நிலையில் ரிதன்யா திருமணத்தின் பொழுது கொடுக்கப்பட்ட நகைகள் மற்றும் ரூபாய் 70 லட்சம் மதிப்புள்ள வால்வோ காரில் அவர் சிரித்தபடி மகிழ்ச்சியாக பயணிக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தின்போது 500 சவரன் நகை தருவதாக கூறிய பெண் வீட்டார், 300 சவரன் அளித்ததாகவும், 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான வால்வோ கார் வாங்கிக் கொடுத்ததுடன், இரண்டரை கோடி ரூபாய் செலவு செய்து பிரமாண்டமாக திருமணம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. எஞ்சிய 200 சவரன் நகைகளை இன்னும் தரவில்லை எனக்கூறித்தான் ரிதன்யாவை கொடுமைப்படுத்தி, அவரது உயிரைக் குடித்துள்ளனர் கணவன் வீட்டார்.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications