திருப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கழுத்தை நெரித்த கடன் தொல்லை.. திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன் கணவன், மனைவி தீக்குளிக்க முயற்சி

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் கடன் விவகாரத்தில் கணவர் கைவிட்டதால் பெண்கள் மனஉளைச்சல் தந்ததாகக் கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றுள்ளார்

இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள், அதிகாரிகள் அவர் மீது உடனடியாக தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

 4 இருளர் பெண்களுக்கு போலீஸாரால் நடந்த பாலியல் வன்கொடுமை, ராமதாஸ் வேதனை 4 இருளர் பெண்களுக்கு போலீஸாரால் நடந்த பாலியல் வன்கொடுமை, ராமதாஸ் வேதனை

கணவனுடன் சேர்ந்து கடன் வாங்கிய நிலையில் கடனை திருப்பி செலுத்தாமல் கணவர் இழுத்தடிப்பதால் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெறிப்பதாக பெண் கண்ணீருடன் தெரிவித்தார்.

கணவனுடன் சேர்ந்து வாங்கிய கடன்

கணவனுடன் சேர்ந்து வாங்கிய கடன்

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி அருகே உள்ள பெரியாயிபாளையத்தில் நல்லதம்பி என்பவர் தன்னுடைய மனைவி ராசாத்தி மற்றும் 2 பிள்ளைகளுடன் வசித்துள்ளார். இருவருமே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களது குடும்பச் செலவினங்களுக்காக கணவன், மனைவி இருவரும் கையெழுத்திட்டு மகளிர் சுய உதவிக் குழுவிடம் கடன் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வருமானத்துக்கு மீறி கடன்

வருமானத்துக்கு மீறி கடன்

வருமானத்துக்கு மீறி கடன் வாங்கியதால், அசலையும் செலுத்தமுடியாமல், வட்டியையும் செலுத்த முடியாமல் ராசாத்தி, நல்லதம்பி அவதிப்பட்டு வந்துள்ளனர். மகளிர் குழுக் கடன் என்பது குழுவில் இருக்கும் அனைத்து பெண்களின் குடும்ப பொருளாதாரம் சார்ந்தது என்பதால் கடனை திருப்பி செலுத்துமாறு தம்பதிக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

கணவன் திருப்பி செலுத்தவில்லை

கணவன் திருப்பி செலுத்தவில்லை

ஒரு கட்டத்தில் நல்லதம்பி தன்னிடம் தற்போது பணம் இல்லாததால் கடனை செலுத்த இயலாது என திட்டவட்டாக கைவிரித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே ராசாத்திக்கு நெருக்கடி கொடுத்த பெண்கள் கணவர் கட்டாத பணத்தை எப்படியாவது திரும்ப கொடுக்குமாறு நிர்பந்தித்துள்ளனர். இதனால் கடன் பிரச்சனையால் குடும்பமும் நடத்த முடியாமல் பிள்ளைகளையும் கவனிக்காமல் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். தனியார் நிறுவனத்தில் கிடைக்கும் ஊதியம் சாப்பாட்டுக்கே போதுமானதாக இருந்துள்ளது.

சுயஉதவிக்குழு நெருக்கடி

சுயஉதவிக்குழு நெருக்கடி

நாளடைவில் கடன் கொடுத்த மகளிர் சுய உதவிக் குழுவினர் வீட்டிற்கே அடிக்கடி வந்து ராசாத்திக்கு நெருக்கடி தந்துள்ளனர். மேலும் கடன் தரவில்லை மிகவும் அவதூறாக மகளிர் சுயஉதவிக் குழுவினர் பேசியதாகவும் கூறப்படுகிறது.இதற்கிடையே இப்பிரச்சனையில் இருந்து காப்பாற்றுமாறு மனு ஒன்றை எழுதிய ராசாத்தி, அதை திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவதற்காக வந்துள்ளார்.

தீக்குளிக்க முயற்சி

தீக்குளிக்க முயற்சி

வளாகத்திற்கு வந்த ராசாத்தி திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை தனது உடல் மீது ஊற்றிக்கொண்டார். இதை பார்த்த அங்கிருந்த அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் உடனடியாக அவரை தடுத்து நிறுத்தி அவர்மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து அவர் காப்பற்றப்பட்டார். இதேபோல் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்திலும் கைக்குழந்தையுடன் வந்த விமானப் பணிப்பெண் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயன்ற சம்பவம் நடைபெற்றுள்து.

English summary
A woman who came to the Tirupur Collectorate premises tried to set fire by pouring kerosene. The woman said in tears that the creditors were strangling her as her husband dragged her out of the loan while she was in debt with her husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X