திருப்பூரில் திருமண வயதையே எட்டாத இளைஞர் எடுத்தமுடிவு.. 2கே கிட்ஸ் பெற்றோர் அறிய வேண்டிய பாடம்
திருப்பூர்: திருப்பூர் பாளையக்காடு 2-வது வீதியை சேர்ந்த பாண்டியன் என்பவருடைய மகன் யோகேஷ்க்கு 19 வயது தான் ஆகிறது. திருமண வயதான 21 வயது ஆகவில்லை.. யோகேஷ் தனது வீட்டின் அருகே வசித்து வந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த காதலுக்கு இருவீட்டாருமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் யோகேஷ் எடுத்த முடிவு பலரையும் ஆடிப்போக வைத்துள்ளது. இன்றைய 2 கே கிட்ஸ்க்கு காதல் மற்றும் திருமண வயது பற்றியும் பாடம் எடுக்க வேண்டியது அவசியம் ஆகிவருகிறது.
இன்றைக்கு பல 2கே கிட்ஸ் இளம் வயதில் காதல் வயப்படுகிறார்கள்.. எதிர்காலத்தை பற்றி புரிதல் இல்லாமல் 16 வயதிலேயே காதல் வலையில் விழுந்து காலத்தை வீணடிப்பது அதிகரித்துள்ளது. நன்றாக படித்து முன்னேற வேண்டிய வயதில், காதலில் விழுந்து, காதலித்த பெண்ணை திருமணம் செய்வது தான் வாழ்க்கை என்று நம்பி சுற்றுகிறார்கள். எதிர்காலத்தை இழந்து சுற்றுவதும் அதிகமாக இருக்கிறது. இது ஒருபுறம் எனில், அந்த காதலுக்கு எதிர்ப்பு வந்தால் சமாளிக்க முடியமால் தவறான முடிவெடுப்பதும் அதிகமாக இருக்கிறது.

இன்றைய இளைஞர்களுக்கு பள்ளிப்பாடம், கல்லூரி பாடத்தை போல், பருவ வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சி, காதல் என்ற பெயரில் ஏமாந்தவர்களின் வாழ்க்கை, போக்சோவில் சிக்கி மாணவர்கள் எப்படி சீரழிகிறார்கள்... படிக்க வேண்டிய வேண்டியதில் காதலில் விழுந்து வாழ்க்கையை தொலைத்த கதைகள் போன்றவை குறித்தும். திருமண வயது மற்றும் காதல் குறித்து பாடம் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. குடிப்பழக்கம், காதல், போக்சோ, போதைப்பொருட்கள் போன்றவை குறித்து பெரிய அளவில் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. திருப்பூரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருப்பூர் பாளையக்காடு 2-வது வீதியை சேர்ந்தவர் பாண்டியன் என்பவருடைய மகன் யோகேஷ்க்கு 19 வயது தான் ஆகிறது. இவர், பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர், தனது வீடு அருகே வசித்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதற்கு இருதரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் மனமுடைந்த யோகேஷ் ஊத்துக்குளிரோடு பாளையக்காடு எஸ்.ஆர்.சி. மில் மேம்பால பகுதிக்கு சென்றுள்ளார். பாலத்தின் மீது ஏறிய அவர் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென கீழே குதித்துள்ளார். சுமார் 30 அடி உயரத்தில் இருந்து குதித்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவனையில அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு யோகேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications