திருச்சி கிழக்கு தொகுதியில் ‘டபுள்’ விஜய்.. மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டி! முழு லிஸ்ட் இதோ!
திருச்சி: தவெக தலைவர் விஜய் போட்டியிடும் திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் அவரையும் சேர்த்து 19 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் என்ற பெயரில் மேலும் ஒருவர் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தவெக, சசிகலா - ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டி நிலவுகிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருச்சி கிழக்கு தொகுதி
திருச்சி 1 என அழைக்கப்பட்டு வந்த திருச்சி கிழக்கு தொகுதி, கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு திருச்சி கிழக்கு என பெயர் மாற்றப்பட்டது. 1984, 1989 ஆம் ஆண்டுகளில் மலர்மன்னன், 1996, 2001 சட்டசபை தேர்தல்களில் பரணிக்குமார், 2006ல் அன்பில் பெரியசாமி ஆகியோர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
கடந்த 2011ல் அதிமுகவைச் சேர்ந்த மனோகரன், 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் வெற்றி பெற்றனர். 2021 தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ் 94,302 வாக்குகள் பெற்று 53,797 வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லமண்டி நடராஜனை வீழ்த்தி திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றார்.
ஸ்டார் தொகுதி
இந்நிலையில், வரும் சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதி ஸ்டார் தொகுதி ஆகியுள்ளது. காரணம், நடிகரும், தவெக தலைவருமான விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது தான்.
திருச்சி கிழக்கு தொகுதியில் 1,04,883 ஆண் வாக்காளர்கள், 1,12,460 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 2,17, 397 வாக்காளர்கள் உள்ளனர். கிறிஸ்தவர்கள் மற்றும் சிறுபான்மையினர் அதிகம் இருப்பதால் விஜய் இந்த தொகுதியை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்
1. இனிகோ இருதயராஜ் - திமுக
2. ராஜசேகரன் - அதிமுக
3. சி. ஜோசப் விஜய் - தமிழக வெற்றிக் கழகம்
4. கிருஷ்ணசாமி - நாம் தமிழர் கட்சி
5. செ. நந்தகுமார் - அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
6. கோபிநாத் - புதிய தமிழகம்
7. ராஜா - தமிழக வாழ்வுரிமைக் கட்சி
8. ஆனந்த் செல்வராஜ் - தேசிய மகா சபா கட்சி
9. கே. விஜய் - அனைத்திந்திய ஜனநாயக மக்கள் கழகம்
10. இளங்கோவன் - பகுஜன் சமாஜ் கட்சி
11. ஆர். முத்துகுமாா் - சாமானிய மக்கள் நலக் கட்சி
12. சுகுமார் - தமிழக படைப்பாளா் மக்கள் கட்சி
13. விஜயமோகனாஜி - விடியல் வளர்ச்சி பேரணி
14. கங்கை உலகநாதன் - சுயேட்சை
15. ராபர்ட் கிறிஸ்டி - சுயேட்சை
16. சார்லஸ் சகாயராஜ் - சுயேட்சை
17. கண்ணன் - சுயேட்சை
18. ராஜேந்திரன் - சுயேட்சை
19. செபாஸ்டியன் ஆனந்த் - சுயேட்சை
கடும் போட்டி
திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவா் சி. ஜோசப் விஜய், திமுக சாா்பில் இனிகோ இருதயராஜ், அதிமுக சாா்பில் க. ராஜசேகரன், நாம் தமிழா் கட்சியின் சாா்பில் மருத்துவா் வி. கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சியின் என். கோபிநாத், பகுஜன் சமாஜ் கட்சியின் ஆா். இளங்கோவன், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செ. நந்தகுமாா், சாமானிய மக்கள் நலக் கட்சியின் ஆா். முத்துகுமாா், தேசிய மகா சபா கட்சியின் ஆனந்த் செல்வராஜ், அனைத்திந்திய ஜனநாயக மக்கள் கழகத்தின் கே. விஜய், தமிழக படைப்பாளா் மக்கள் கட்சியின் சீ. சுகுமாா், விடியல் வளா்ச்சி பேரணியின் விஜய மோகனாஜி மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 39 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசீலனையின்போது, 39 மனுக்களில் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 30 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மாற்று வேட்பாளராக அதிமுக-வில் அளிக்கப்பட்ட 2 வேட்பு மனு, நாம் தமிழா் கட்சியில் அளிக்கப்பட்ட 2 மனு, திமுக சார்பில் அளிக்கப்பட்ட 2 மனு, தவெக தலைவா் விஜய் கூடுதலாக அளித்த ஒரு மனு, சுயேச்சைகளின் 2 மனு என மொத்தம் 9 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மீதமுள்ள 30 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் 3 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இறுதியாக, திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
-
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்? -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
இத்தனை வருஷமாக காத்திருந்து நேரம் பார்த்து அவதூறு செய்றாங்க.. மனைவி சங்கீதாவை சூசகமாக சாடிய விஜய்! -
உண்மையான காங்கிரஸ் கட்சி தவெக பக்கம் நிற்கிறது.. நெல்லையில் விஜய் சொன்ன முக்கிய விஷயம்! -
ஒரே பெயரில் பலர் போட்டி! சென்னையில் விஜய் உள்பட தவெக –அதிமுக வேட்பாளர்களுக்கு சிக்கல்! லிஸ்ட் இதோ -
விஜய் அறிவித்த 2 பேர் வேட்பு மனுவே தாக்கல் பண்ணல.. கடைசி நாளில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
"எழுத்து பிழை".. சிதம்பரம் தவெக வேட்பாளரின் வேட்புமனு நிராகரிப்பு.. மாற்று வேட்பாளராகும் தந்தை -
கரூர் கேஸில் என் மீது பழியை போட்டார்கள்.. ஜனநாயகனை முடக்கினார்கள்.. அப்படியே ஆக்ரோஷமான விஜய்! -
"விஜய் மன்னிப்பு கேட்டே ஆகணும்".. ஒரு வார்த்தையால் போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்.. என்ன மேட்டர்? -
விஜய் வரவே மாட்டாரா? பொம்மையை வைத்து பிரச்சாரம்.. கடுப்பான தவெக வேட்பாளர்கள்.. பரிதாப நிலை -
ஜனநாயகன் பற்றிய கேள்வி, ரஜினி கொடுத்த ரியாக்சன்! கடைசியில் சொன்ன தத்துவம் தான் ஹைலைட்












Click it and Unblock the Notifications