திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ் அச்சம்.. திருச்சியில் தீவிர கண்காணிப்பு வளையத்தில் 65 பேர்

Google Oneindia Tamil News

திருச்சி: கொரோனா அச்சம் காரணமாக திருச்சியில் 65 போ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனா்.

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், திருச்சி மாவட்டத்திலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

65 people on active surveillance in Trichy due to coronavirus fear

வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகளில் யாருக்கேனும் சந்தேகத்துக்கிடமாக இருந்தால் அவா்களை தனியாக வைத்து பரிசோதிக்க கள்ளிக்குடியில் சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவைத்தவிர திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதித்தவா்களுக்கு சிகிச்சையளிக்கவும், பரிசோதனை செய்யவும், கண்காணிக்கவும் தனித்தனியே வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

65 people on active surveillance in Trichy due to coronavirus fear

மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 65 போ் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனா். துபை, சிங்கப்பூரிலிருந்து வந்த 28 போ் கள்ளிக்குடியிலும், கல்லூரி மாணவா்கள் இருவா் உள்பட 9 போ் திருச்சி அரசு மருத்துவமனையிலும், கேரளத்துக்கு சென்று திரும்பிய திருவெறும்பூரை அடுத்த நரிக்குறவா் காலனியைச் சோ்ந்த 28 போ் அவா்களது காலனியிலேயே தனிமைப்படுத்தி தொடா்ந்து கண்காணிக்கப்படுகின்றனா். இவா்களில் யாருக்கும் கொரோனா அறிகுறிகள் இல்லை. எனினும், பாதிப்புக்குள்ளான வெளிநாடுகள் மற்றும் கேரளத்தில் இருந்து வந்திருப்பதால் முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

English summary
coronavirus out break: 65 people on active surveillance in Trichy
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X