திருச்சி கிழக்கு தொகுதி.. விஜய் இடத்தில் களமிறங்கப் போகும் விஐபி.. தவெகவின் அடுத்த முகம் யார்?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி கிழக்கு தொகுதி தவெக வேட்பாளராக நடிகை திரிஷா அல்லது ஜான் ஆரோக்கியசாமி களமிறங்கலாம் என்று சொல்லப்படுகிறது. விஜய் போட்டியிட்டு வென்ற தொகுதி என்பதால், அந்த தொகுதி தானாகவே விஐபி தொகுதியாக மாறிவிட்டது. இதனால் தவெகவில் விஜய்க்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடக் கூடும் என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் திருச்சி கிழக்கு, விராலிமலை, கரூர், பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. டிசம்பர் மாதம் 3வது வாரத்தில் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. மற்ற 4 தொகுதிகளுக்கு தவெகவில் ஏற்கனவே அதிமுகவில் இருந்து பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

John Arokiasamy Trisha TVK Vijay

ஆனால் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெகவில் தொடக்கம் முதலே இருப்பவர்களுக்கும், கட்சியின் அடுத்த முகமாக இருப்பவர்களுக்கும் தான் வாய்ப்பு அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. விஜய் போட்டியிட்டு வென்றிருப்பதால், திருச்சி கிழக்கு தொகுதி விஐபி தொகுதியாக மாறிவிட்டது. இதனால் விஐபி வேட்பாளரை தவெக அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குப கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட ஆர்வமாக உள்ளனர். ஆனால் அதிமுகவில் இருந்து வந்தவர்கள் போட்டியிட்டால், கூடுதல் சிக்கலாகவும் வாய்ப்புகள் உள்ளது. அதுமட்டுமல்லாமல் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான அன்பில் மகேஷ் மற்றும் கே.என்.நேரு இருவரும் குறி வைக்கப்பட்டுள்ளதாக திமுகவினர் கூறி வருகின்றனர்.

திருச்சி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவித்தால், இவர்கள் இருவரும் தான் முன்னின்று தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் இருவருமே தவெக குறி வைத்துள்ளது. ஒருவேளை திருச்சி கிழக்கு தொகுதியில் ஸ்டாலின் களமிறங்கினால், சூழல் வேறு மாதிரி உருவாகும். இதனால் முன்னெச்சரிக்கையாகவே தவெக காய் நகர்த்துவதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் திருச்சி கிழக்கு தொகுதியில் வெல்வதை தவெக கவுரவமாக கருதுகிறது. அந்த தொகுதி வெற்றிக்கு எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது என்றும் விஜய் எண்ணுவதாக கூறப்படுகிறது. இதனால் தவெகவில் அதிக பவர்ஃபுல்லாக இருக்கும் ஜான் ஆரோக்கியசாமி அங்கு வேட்பாளராக களமிறங்கலாம் என்பதே பலரின் கணிப்பாக உள்ளது.

ஆனால் கோவையில் நடிகை திரிஷா நடத்திய ரோடு ஷோவும், அவருக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பும் பல்வேறு சந்தேகங்களை உருவாக்கி இருக்கிறது. நடிகை திரிஷாவை தவெக சாஃப்ட் லான்ச் செய்கிறதோ என்று அக்கட்சியினரும் பேசி வருகின்றனர். இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெகவில் விஜய்க்கு அடுத்த முகமாக இருக்கும் வேட்பாளர் களமிறங்கவே அதிக வாய்ப்பு என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+