கொரோனாவால் வேலையிழந்த இளைஞர்கள்... காணொலி மூலம் வேலைவாய்ப்பு முகாம்... அன்பில் மகேஷ் புது முயற்சி..!
திருச்சி: கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பலரும் வேலையிழந்து தவித்து வரும் சூழலில் காணொலி காட்சி மூலம் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ.
நாளை மறுதினம் 10-ம் தேதியன்று நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 4,000 பேருக்கு பணி கிடைக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி பேதங்களை கடந்து முழுக்க முழுக்க திறமை, தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணித்தேர்வு நடைபெறவுள்ளது.

அன்பில் மகேஷ்
திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனது அன்பில் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறார். ஆண்டுக்கு இரண்டு முறையாவது இவர் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் குறைந்தது 7,000 இளைஞர்கள் பயனடைந்து வருகின்றனர். அதில் திருச்சி மாவட்ட இளைஞர்கள் மட்டுமல்லாமல் அருகாமை மாவட்டங்களான புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களும், பட்டதாரிகளும் அடங்குவர்.

காணொலி மூலம்
இதனிடையே கொரோனா ஊரடங்கால் பல தொழில்நிறுவனங்கள் நலிவடைந்ததன் விளைவாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களை கை தூக்கி விடும் புதிய முயற்சியாக கொரோனா பேரிடரிலும் காணொலி காட்சி மூலம் வேலைவாய்ப்பு முகாமை நடத்துகிறார் அன்பில் மகேஷ். கட்சி பேதங்களை கடந்து முழுக்க முழுக்க திறமை, தகுதியின் அடிப்படையில் பணித்தேர்வு நடைபெறவுள்ளது.

4,000 பணியிடங்கள்
நாளை மறுதினம் சனிக்கிழமை நடைபெறும் இந்த வேலை வாய்ப்பு முகாம் மூலம் 4,000 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இதில் ரிலையன்ஸ், சிண்டர் எலக்ட்ரிக், லைஃப்ஸ்டைல், ஐ.டி.பி.ஐ. வங்கி, பேரிவேர், டி.வி.எஸ். குழுமம், உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் பல பங்கேற்றிருக்கின்றன. 10-வது படித்தவர்கள் முதல் பி.இ. படித்தவர்கள் வரை இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

ஆர்வம்
அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியை கொண்டு முன்னெடுத்துள்ள இந்த முயற்சியை ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும், எம்.பி.யும் முன்னெடுத்து தங்கள் பகுதி இளைஞர்களுக்கு அவர்களது திறமைக்கேற்ப வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால், அது காலத்தால் அழியாத புகழை சேர்க்கும்.
-
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications