குடியரசு தினத்தில் விவசாயிகள் மீது பாஜக அரசு காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்... கார்த்தி சிதம்பரம்
திருச்சி: குடியரசு தினத்தில் விவசாயிகள் மீது பாஜக அரசு காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது என்று மணப்பாறையில் சிவகங்கை லோக்சபா எம்பி கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவா் பி. சத்தியமூா்த்தியை நேற்று சிவகங்கை லோக்சபா எம்பி கார்த்தி சிதம்பரம் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் அவர்களது குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், குடியரசு தினத்தில் டெல்லியில் நடந்த சம்பவங்களை பார்க்கும்போது உண்மையாகவே இது குடியரசு தினமா என சந்தேகம் எழுகிறது.
வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் பேரணியாக வரும்போது காவல்துறையினர் அத்துமீறி தாக்குதல் நடத்துகின்றனர். ஒரு ஜனநாயக நாட்டில் போராடுபவர்களுடன் பேசி ஒருமுடிவெடுத்து இருக்க வேண்டும். 10 முறை பேசியும் விடாப்பிடியாக இருக்கின்ற பாஜக அரசு காட்டு மிராண்டித்தனமாக விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி இருக்கின்றது. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. 2019ம் ஆண்டு எம்பி தேர்தலில் எப்படி வெற்றி பெற்றோமோ, அதேபோல் திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு கார்த்தி சிதம்பரம் கூறினார்.
-
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
திமுக புறக்கணிப்பு! மம்தாவின் பெரும் தோல்விக்கு இடையே இன்று இந்தியா கூட்டணி கூட்டம்.. அஜெண்டா என்ன? -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா?











Click it and Unblock the Notifications