அதிகாலையில் களமிறங்கிய அதிகாரிகள்! முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் ரெய்டு!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திமுகவின் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்புடைய இடங்களில் இன்று அதிகாலையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரெய்டில் இறங்கியிருக்கின்றனர். சென்னை, திருச்சி என 6 இடங்களில் ரெய்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு முறைகேடாக அரசு அனுமதி பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடிக்கும் மேல் லஞ்ச மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

Anbil Mahesh Tiruchy school dmk

இன்று அதிகாலையில் ரெய்டு தொடங்கியிருக்கிறது. திருச்சி தென்னூர் அண்ணா நகரில் உள்ள அன்பில் மகேஷின் சொந்த வீட்டை முழுவதுமாக அதிகாரிகள் சல்லடை போட்டு சலித்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பிலும் ரெய்டு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அன்பில் மகேஷுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் தொடர்புடைய மொத்தம் 6க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் என்ற பதிவு செய்யப்படாத அமைப்பின் தலைவரும், திமுக பிரமுகருமான பி.டி.அரசகுமார் என்பவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அரசகுமார் தனக்குள்ள அரசியல் மற்றும் அதிகார பலத்தை பயன்படுத்தி, தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளி தரம் உயர்த்துதல் DTCP/CMDA அனுமதிகள் போன்ற அரசு சான்றிதழ்களை பெற்று தருவதாக கூறி பல பள்ளி நிர்வாகங்களிடம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்து ஏமாற்றியதாக புகார்கள் பல வந்தன.

இந்த சங்கம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டபோது, அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் அந்த தொடக்க விழாவில் பங்கேற்றிருந்தனர். சட்டமன்றத்திலும் இது தொடர்பாக புகார்கள் எழுப்பப்பட்டிருந்தன.

தற்போதைய விசாரணையில் இந்த முறைகேட்டில் பணப் பரிவர்த்தனைகள் எவ்வாறு நடந்துள்ளன என்பதற்கான ஆதாரங்களை திரட்டவே முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் இல்லத்தில் ரெய்டு நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+