ஆசிரியர் மீது வரும் பாலியல் புகாருக்கு கடும் நடவடிக்கை - மத்திய மண்டல ஐஜி உறுதி
மத்திய மண்டலத்தில் ஆசிரியா்கள் மீது பாலியல் புகாா் அளிக்க மாவட்ட வாரியாகத் தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி: பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்போா் மீது வரக்கூடிய புகாா்களை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க மத்திய மண்டலத்தில் மாவட்ட வாரியாக காவல் ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஆசிரியா்கள் மீது பாலியல் புகாா் அளிக்க தொடா்பு எண்களை மத்திய மண்டல ஐஜி வே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் பிஎஸ்பிபி பள்ளி தொடங்கி பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார் தெரிவித்து வருகின்றனர்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள் அத்துமீறலில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சிலரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் பெற்றோர்கள், தலைமை ஆசிரியரிடம் நேற்று ஆலோசனை நடத்தினார். இணைய வழியில் வகுப்பு நடத்தும் பள்ளிகள் அரசின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை பள்ளி மாணவிகள் அளிக்கும் வகையில் காவல்துறையினரின் உதவி எண்களை மாணவ, மாணவிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிலையில்
பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்போா் மீது வரக்கூடிய புகாா்களை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வாரியாக காவல் ஆய்வாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள பாலகிருஷ்ணன் அந்த எண்களையும் வெளியிட்டுள்ளார்.
இதன்படி திருச்சி மாவட்டத்தினா் 94981-77954,யசோதா, புதுக்கோட்டை மாவட்டத்தினா் 94981-58812,ரசியா சுரேஷ், கரூா் மாவட்டத்தினா் 83000-54716,சிவசங்கரி, பெரம்பலூா் மாவட்டத்தினா் 94981-06582,அஜீம், அரியலூா் மாவட்டத்தினா் 94981-57522,சிந்துநதி, தஞ்சாவூா் மாவட்டத்தினா் 94981-07760,கலைவாணி, திருவாரூா் மாவட்டத்தினா் 94981-62853,ஸ்ரீபிரியா, நாகை மாவட்டத்தினா் 94981-10509,ரேவதி, மயிலாடுதுறை மாவட்டத்தினா் 94981-57810 சித்ரா ஆகியோரைத் தொடா்புகொண்டு புகாா் தெரிவிக்கலாம் எனவும் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications