சேர்ந்தே இருப்பது.. காங்கிரஸும் கோஷ்டி மோதலும்! கைகலப்பால் கலவரக் காடான ஆபிஸ்! அலறி ஓடிய தொண்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் கோஷ்டி மோதலால் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதால் சில நிர்வாகிகள் காயமடைந்த நிலையில், காவல்துறையினர் சமரசம் செய்து அங்கிருந்த கட்சி நிர்வாகிகளை அப்புறப்படுத்தினர்.

Recommended Video

    சேர்ந்தே இருப்பது.. காங்கிரஸும் கோஷ்டி மோதலும்! கைகலப்பால் கலவரக் காடான ஆபிஸ் - வீடியோ

    நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்தனர்.

    இந்தியா முழுவதும் இன்று காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    இதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் எதிரே உள்ள தபால் நிலையம் எதிரே கண்டன போராட்டத்தில் மாவட்டத் தலைவர் ஜவகர் தலைமையில்-100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய அரசு கண்டித்து கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தினருக்கு நிர்வாகிகள் எல்லோரும் நடந்து வந்தனர்.

    கோஷ்டி மோதல்

    கோஷ்டி மோதல்

    அப்பொழுது மாவட்ட தலைவர் ஜவகர் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வக்கீல் சரவணன் மற்றும் நிர்வாகிக்குள் திடீரென கோஷ்டி மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. வக்கீல் சரவணனை ஒருவர் தாக்க மற்றொருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர். தொடர்ந்து அலுவலகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்படடது.

    கைகலப்பு

    கைகலப்பு

    ஆர்ப்பாட்டத்திற்காக பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அலுவலகம் உள்ளே வந்து எல்லோரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதன் காரணமாக காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது தொடர்ந்து காவல்துறையினர் அங்கு இருந்த கட்சியின் அனைவரையும் வெளியேற்றினர். இதனையடுத்தே அங்கு பதற்றம் தணிந்தது.

     காங்கிரசும் கோஷ்டி மோதலும்

    காங்கிரசும் கோஷ்டி மோதலும்

    சேர்ந்தே இருப்பது காங்கிரசும் கோஷ்டி மோதலும் என்ற வகையில் காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கோஷ்டி பூசல் என்பது தவிர்க்க முடியாதது. கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், ப சிதம்பரம், ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட பெரும் தலைவர்களின் ஆதரவாளர்கள் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் தனித்தனி கோஷ்டியாகவே செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் எங்கு கூட்டம் நடந்தாலும் அங்கு ஒரு முறையாவது கோஷ்டி மோதலும் கைகலப்பும் நடப்பது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே திருச்சியில் திருநாவுக்கரசர் பங்கேற்ற கூட்டத்திலும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+