தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்
திருச்சி: முதலமைச்சர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் திருச்சி கிழக்கு பதவியை ராஜினாமா செய்துள்ளார். திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக விஜய் இன்று திருச்சி சென்றார். அப்போது திருச்சியில் விஜய் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினார்.
திருச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், தவெக, திமுக இடையே தான் போட்டி. மக்கள் சட்டசபையில் என்ன நடக்கிறது என்று கவனிக்கிறார்கள். ரீல்ஸ் போட்டவர்கள் எல்லாம் நியூஸ் பார்க்கிறார்கள். இந்த விழிப்புணர்வு யாரால் நடந்தது என நான் சொல்ல வேண்டியதில்லை.
இப்போதும் தற்குறி என்று கூறுகிறார்கள். அவர்கள்தான் திமுகவின் அரசியலை கேள்விகுறியாக்கியுள்ளனர். இன்னும் கேள்வி குறியாக்குவார்கள். மக்கள் அரசியல் புரிதல் இல்லாமல் வாக்களிக்கிறார்களாம். அவர்களுக்கு வாக்களித்தால் நல்லவர்களாம், நமக்கு வாக்களித்தால் கெட்டவர்களாம்.

மக்கள் தெளிவு
தற்குறி என்கிறார்கள். நல்லா வருது.. வேண்டாம் விடுங்க. அண்ணா ஆரம்பித்த கட்சியை இப்படி ஆக்கிவிட்டு "உண்மையை சொல்லு உடன்பிறப்பே" (திமுகவினரிடம் ஸ்டாலின் கருத்து கேட்ட நிகழ்வின் பெயர்) என்கிறார்கள். திமுக இப்படியாக என்ன காரணம் என்று அவர்களின் குடும்பத்தில் தான் கேட்க வேண்டும்.
உழைக்காமல் இருந்த ஒரு குடும்பம் தான் திமுக தோல்விக்கு காரணம். நாம் ஆட்சிக்கு வருவதை தடுக்க எவ்வளவு சதிகள் நடந்தன. இந்த பழைய டெக்னிக் பயன்படுத்தி எங்களையும், மக்களையும் பிரிக்க நினைத்தால் பயனில்லை. மக்கள் தெளிவாகிவிட்டார்கள்.
ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். தேர்தலில் தோற்ற விரக்தியில் ஸ்டாலின் சார் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.
விஜய் தான் மக்களின் ஒரே பிரதிநிதி. நிதி சம்பந்தப்பட்ட எல்லா கேட்டையும் திமுக மூடிவிட்டது. அதை சரி செய்துவிட்டு விவசாயிகளுக்கு கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். விவசாயிகள் கவலைப்பட வேண்டும். திமுக ஆரம்பத்திலேயே போதையை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். ஒவ்வொரு சாலையிலும் போதை பொருள் பரவிவிட்டது.
தீய சக்தி தீர்ந்து போன சக்தி
எல்லாவற்றையும் அவர்கள் செய்துவிட்டு என் மித பழி போடுகிறார்கள். திறன்மிக்க காவலர்களை நியமித்து சட்டம் ஒழுங்கை சரி செய்வோம். அடுத்த வாரம் சிங்க பெண்கள் பாதுகாப்பு திட்டம் நிறைவேறும். சட்டப்படி விரைவாக தண்டனை வாங்கித்தரப்படும். திமுகவும், தீர்ந்து போன சக்தியும் யாருக்கும் தெரியாமல் கூட்டு சேர்ந்து ஆட்சியமைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டனர். திமுக தீய சக்தி மட்டுமல்ல மக்களை விட்டு ஓரமாக சென்ற தூர சக்தி. நீங்கள் எல்லாம் எங்களை பேசலாமா" என்றார்.
-
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
கோட்டையில் முதல்வர் விஜய்யின் அசுர வேகம்.. பரந்தூர், FSI, ஹூண்டாய் மெகா டீல்.. ஒரே நாளில் அதிரடி! -
மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. சென்னைக்கு ஆதவ் அர்ஜுனா.. முதல்வர் விஜய் மேஜர் உத்தரவு -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
உடனே வாங்க.. அதிகாரிகளை மீட்டிங் ரூமிற்கு அழைத்த விஜய்.. துளைச்சு எடுத்துட்டாரே.. வாத்தி ரெய்டு!












Click it and Unblock the Notifications