அமைச்சர் கே.என்.நேரு Vs திமுக எம்.எல்.ஏ.சவுந்தரபாண்டியன்! முட்டல் மோதலால் தீயாய் பரவும் ஒரு தகவல்!
திருச்சி: அமைச்சர் கே.என்.நேரு மீது கொண்ட அதிருப்தி காரணமாக லால்குடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் தனது ராஜினாமா கடிதத்தை கட்சி மேலிடத்துக்கு அனுப்பி வைத்ததாக ஒரு தகவல் உலா வந்துக் கொண்டிருக்கிறது.
ஆனால் இதனை சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் தரப்பு திடமாய் மறுப்பதுடன் அப்படியொரு நிகழ்வே நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்ட திமுகவை கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் அமைச்சர் நேரு. இவர் முதன்மைச் செயலாளராக புரோமோஷன் செய்யப்பட்டதை தொடர்ந்து வேறு வழியில்லாமல் அரை மனதுடன் தனது மாவட்டச் செயலாளர் பதவியை விட்டுக்கொடுத்தார்.
அதுவும் திருச்சி தெற்கு, திருச்சி மத்திய, திருச்சி வடக்கு என கட்சியின் அமைப்பை மூன்றாக பிரித்து திருச்சி வடக்கிலும், திருச்சி மத்தியிலும் தன் சொல்பேச்சு கேட்கும் ஆதரவாளர்களையே மாவட்டச் செயலாளராக கொண்டு வந்தார். திருச்சி தெற்கு மாவட்ட திமுகவுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்டச் செயலாளராக இருப்பதால் நேருவும் சரி அவரது ஆதரவாளர்களும் அந்தப் பக்கமே எட்டிப்பார்ப்பதில்லை.
ஆனால் அதே வேளையில் திருச்சி மத்தியிலும், திருச்சி வடக்கிலும் அமைச்சர் நேரு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதனிடையே அமைச்சர் நேருவின் பூர்விக கிராமத்தை உள்ளடக்கிய தொகுதியான லால்குடி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் சவுந்தரபாண்டியன், நேரு மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தான் தனது தொகுதியில் அமைச்சர் நேரு பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கூட அவர் தலைகாட்டவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் விஷேச தகவல் என்னவென்றால் ஒரு காலத்தில் அமைச்சர் நேருவின் மிக நெருங்கிய வட்டத்தில் இருந்தவர் சவுந்தரபாண்டியன். ஆனால் அப்படிப்பட்ட அவரே இன்று நேருவை விட்டு விலகத் தொடங்கியிருக்கிறார் எனக் கூறப்படுவது தான் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
இதனிடையே எந்த ராஜினாமா கடிதத்தையும் சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ.அனுப்பவில்லை என்றும் அவருக்கு யார் மீதும் எந்த அதிருப்தியும் இல்லை எனவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எது எப்படியோ கத்திரிக்காய் முத்தினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும் என இந்த விவகாரத்தின் மீது திருச்சி அதிமுகவினர் கண் வைத்துள்ளனர்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications