திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஹலோ யார்னா இருக்கீங்களா.. திருச்சியா இது... ரோடும் காலி.. கடைகளும் காலி

Google Oneindia Tamil News

திருச்சி: திருச்சியில் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும் கடைவீதிகள் அனைத்தும் கொரோனா அச்சம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.

Recommended Video

    எப்படி இருந்த இடம் இப்படி ஆகிடுச்சே! எல்லாம் இந்த கொரோனாவால்

    திருச்சியின் இதயப் பகுதியாகவும், மக்கள் அதிகம் கூடும் பகுதியாகவும் உள்ளது மெயின்கார்டு கேட், தெப்பகுளம், மலைக்கோட்டை கடைவீதி, என்எஸ்பி சாலை, சிங்காரத்தோப்பு, மேலரண்சாலை, கீழரண்சாலை. இங்குதான் எலக்ட்ரானிக் பொருள்கள், ஜவுளி வகைகள், நகைகள், செல்லிடப்பேசி மற்றும் அனைத்து வகையான வீட்டு உபயோக பொருள்களின் பிரதான சந்தையாக உள்ளது. பெரிய கடைகள் மட்டுமின்றி சாலையோரக் கடைகள், தள்ளு வண்டி கடைகள், கைகளில் பொருள்களை வைத்து வியாபாரம் செய்யும் நபா்கள் என பலரும் உள்ளதால் மக்கள் கூட்டம் எப்போதும் நிரம்பி காணப்படும்.

    coronavirus: with out traffic in trichy, very less people out from home

    கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிா்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனா்.

    coronavirus: with out traffic in trichy, very less people out from home

    இதன் ஒரு பகுதியாக கடை வீதிகளுக்கு கூட்டம், கூட்டமாக வருவதை தவிர்த்துள்ளனா். கொரோனா அச்சம் காரணமாக பெரும்பாலானோர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா். இதனால், திருச்சியில் எப்போதும் மக்கள் திரளாகக் காணப்படும் கடை வீதி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. இதுமட்டுமல்லாது, சாலைகளில் வழக்கமாக காணப்படும் வாகனங்களின் எண்ணிக்கையும் குறைந்தே காணப்படுகிறது.

    coronavirus: with out traffic in trichy, very less people out from home

    திருச்சி மெயின்கார் கேட் பகுதி மட்டுமல்லாது சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மென்ட், பாலக்கரை, உறையூா், கே.கே. நகா், காஜாமலை, சுப்பிரமணியபுரம், மன்னாா்புரம் என மாநகரின் பெரும்பாலான பகுதிகளும் அதன் சாலைகளும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடியே காணப்படுகிறது.

    coronavirus: with out traffic in trichy, very less people out from home

    coronavirus: with out traffic in trichy, very less people out from home
    English summary
    with out traffic in trichy, very less people out from home due to coronavirus fear
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X