Devanathan Yadav:ரூ 525 கோடி மோசடி புகார்.. பதுங்கியிருந்த சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் கைது
திருச்சி: நிதி நிறுவனத்தில் ரூ 525 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்திய மக்கள் கல்வி இயக்கத் தலைவர் தேவநாதன் யாதவ் திருச்சியில், சென்னை குற்றபிரிவு போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டார். அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார் தேவநாதன் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவராக உள்ள தேவநாதன் யாதவ், பாஜக ஆதரவாளர் ஆவார். இவர் டிவி சேனலையும் நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தின் தலைவராகவும் தேவநாதன் இருந்து வருகிறார். 1872 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் தற்போது 5 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களில் பலர் தங்களுக்கு கிடைத்த பணப்பலன்களை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ததாக தெரிகிறது. முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 10 முதல் 15 சதவீதம் வரை வட்டி தருவதாக கூறி ரூ 50 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. அது போல் ரூ 525 கோடி வரையிலான வைப்பு தொகையை திரும்ப தர நிதி நிறுவனம் மறுப்பதாகவும் முதலீட்டாளர்கள் குற்றம்சாட்டினர்.
நிதி நிறுவனம் அளித்த 150 காசோலைகள் பவுன்ஸ் ஆகி வங்கியிலிருந்து திரும்பிவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள். இது தொடர்பாக லோக்சபா தேர்தல் நேரத்திலேயே தேவநாதன் யாதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த மோசடி தொடர்பாக கடந்த 6ஆம் தேதி மயிலாப்பூர் நிதி நிறுனம் அருகே 50-க்கும் மேற்பட்டோர் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சென்னை குற்ற பொருளாதார பிரிவு போலீஸார் தேவநாதன் யாதவ்வை திருச்சியில் வைத்து இன்று (ஆகஸ்ட் 13) கைது செய்தனர்.
இதையடுத்து தேவநாதன் மீது சென்னையில் வழக்கு இருப்பதால் அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தின் போது நிதி மோசடி புகார் எழுந்ததால் சிவகங்கை தொகுதியில் மத்திய அமைச்சர் அமித்ஷா , பிரச்சாரம் செய்யவிருந்த நிலையில் அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 4,27,677 வாக்குகளையும் அதிமுக சார்பல் போட்டியிட்ட சேவியர் தாஸ் 2,22,013 வாக்குகளையும் பாஜக சார்பில் போட்டியிட்ட தேவநாதன் யாதவ் 1,95,788 வாக்குகளையும் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் தமிழகத்தில் பணக்கார வேட்பாளர்களில் தேவநாதனும் ஒருவர் என சொல்லப்பட்டது.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications