உங்களுக்கு ஒன்றும் ஆகாது! விரைவில் குணம் அடைவீர்கள்! முத்தரசனை நேரில் நலம் விசாரித்த துரை வைகோ!
திருச்சி: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனை, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்து துரை வைகோ கூறியிருப்பதாவது;
திருச்சி காவிரி மருத்துவமனை: பெருமதிப்பிற்குரிய அண்ணன் இரா.முத்தரசன் அவர்களின் உடல்நலனை நேரில் கேட்டறிந்தேன். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் அன்பிற்குரிய அண்ணன் இரா.முத்தரசன் அவர்கள், உடல்நலக்குறைவால் திருச்சி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு: காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமை காக்கவும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்து 16.10.2023 அன்று திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுவிட்டு, திருச்சி காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அண்ணன் இரா.முத்தரசன் அவர்களை நேரில் சந்திக்கச் சென்றேன்.
நோய்த்தொற்று: நோய்த்தொற்று இருப்பதால் பார்க்க வருபவர்களுக்கு ஏதேனும் சிரமம் வந்துவிடக் கூடாது என, அண்ணன் இரா.முத்தரன் அவர்கள் தெரிவித்தபோதும், அண்ணன் அவர்களை கட்டாயம் சந்திக்க வேண்டும் என சொல்லி, அவரது உடல் நலனை நேரில் கேட்டறிந்தேன்.
என் மீது அன்பு: அண்ணன் இரா.முத்தரசன் அவர்கள், இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் மீது தனிப்பட்ட முறையில் அன்பும், மதிப்பும் வைத்திருப்பவர். மக்கள் நலக் கூட்டணி உருவானபோது, தலைவர் வைகோ அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர். என் மீதும், அளவற்ற அன்பை எப்போதும் வெளிப்படுத்துவார். அவர், விரைவில் பூரண நலம் பெற்று, மக்கள் பணிக்கு திரும்ப மறுமலர்ச்சி தி.மு.க சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிமுக நிர்வாகிகள்: இந்த சந்திப்பின்போது, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மருத்துவர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு.பூமிநாதன், திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி சோமு, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் டி.டி.சி.சேரன், தலைவர் வைகோவின் உதவியாளர் வெ.அடைக்கலம் ஆகியோர் உடனிருந்தார்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications