திருப்பதி தேவஸ்தானத்திற்கே விபூதி அடிக்க பார்த்த கும்பல்.. அப்படியே இருக்கே.. அதுவும் திருமலையில்!
திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்திற்கே விபூதி அடிக்க பார்த்த கும்பல், திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளம் ஆரம்பித்து, அதனை திருமலையில் இருந்தே நடத்தி இருக்கிறார்கள். பெருமாளின் பக்தர்களை ஏமாற்றி பிராடு வேலை செய்த இணையதளம் கண்டுபிடிக்கப்பட்டு அமல்பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி தேவஸ்தானம் பெயரில் போலி இணையதளம் செயல்பட்டு வந்துள்ளது. அதுவும் திருமலையில் இருந்தே ஒரிஜினல் போல செயல்பட்டதுதான் ஹைலைட் ஆகும். இதனால் அதிர்ச்சி அடைந்த திருப்பதி தேவஸ்தானம் , போலி இணையதள முகவரி தோற்றத்தையும், திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியையும் வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதள முகவரியை போல், போலி இணையதள முகவரியை தொடங்கி, பலர் பக்தர்களிடம் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தேவஸ்தானத்துக்கு புகார்கள் வந்தன.
அதன்பேரில் தேவஸ்தான தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். திருமலை-திருப்பதி தேவஸ்தானம் என்ற பெயரில் திருமலையிலேயே அந்த போலி இணையதளம் செயல்பட்டு வந்தது. இதை கண்டுபிடித்த அதிகாரிகள், திருமலை 1-டவுன் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அதற்கான தகவல் அறிக்கையை ஆந்திர மாநில சைபர் கிரைம் போலீசில் ஒப்படைத்துள்ளனர். திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதள முகவரியின் பெயரில் சில மாற்றங்களை ஏற்படுத்தி தொடங்கிய போலி இணையதளம் குறித்து சைபர்
கிரைம் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

ஏற்கனவே 40 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய புகாரை தொடர்ந்து போலி இணையதள எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து இருக்கிறது. போலி இணையதளங்களில் டிக்கெட் முன்பதிவு, பிரசாதங்கள், அறைகள் முன்பதிவு போன்றவற்றை புக்கிங் செய்யலாம் என அறிவித்து, பக்தர்களிடம் மோசடின செய்தது தெரியவந்துள்ளது
திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக மட்டும் ஏழுமலையான் கோவில் குறித்த சேவைகளை பெறுங்கள். திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஏழுமலையான் கோவில் ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகளை முன்பதிவு செய்யுங்கள். இது தவிர திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் ஆப்பையும் பயன்படுத்தலாம். ஆனால், போலி இணையதளங்களை நம்ப வேண்டாம் என்று பக்தர்களுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications