குர்ஆன், ஹதீஸில் அறிவியல் உண்மைகள்.. திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற இஸ்லாமிய கண்காட்சி
திருச்சி: ஜமால் முகமது கல்லூரியில் உள்ள அரபுத் துறை சார்பில் "குர்ஆன் ஹதீஸில் உள்ள அறிவியல் உண்மைகள்" என்ற தலைப்பில் மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது.
திருச்சியில் பழம்பெருமை வாய்ந்த ஜமால் முகமது கல்லூரியில் செயல்பட்டு வரும் அரபுத் துறை சார்பில் "குர்ஆன் ஹதீஸில் உள்ள அறிவியல் உண்மைகள்" என்ற தலைப்பில் மாபெரும் இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது. திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் உள்விளையாட்டு அரங்கில் பிப்ரவரி 28 ஆம் தேதி தொடங்கிய இந்த 2 நாள் கண்காட்சி இன்றும் நடைபெறுகிறது. இதனை ஜமால் முகமது கல்லூரியின் தாளாளர் மற்றும் செயலாளர் முனைவர் ஏகே காஜா நஜீமுத்தீன் நேற்று திறந்து வைத்தார்.

கல்லூரி பொருளாளர் ஜமால் முகமது, துணைச் செயலாளர் டாக்டர் அப்துல் சமது, உறுப்பினர் மற்றும் கௌரவ இயக்குனர் அப்துல் காதர் நிஹால், கல்லூரி முதல்வர் டாக்டர் இஸ்மாயீல் முஹைதீன், துணை முதல்வர் ஜார்ஜ் அமலரத்தினம், அரபுத் துறைத் தலைவர் டாக்டர் முஹம்மது இஸ்மாயில் முன்னிலை வகித்தனர். கண்காட்சியில் 50 அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. சென்னை, தஞ்சாவூர், அம்மாபட்டினம், திருநெல்வேலி, மேல்விஷாரம், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்தும் கண்காட்சியில் 150 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
கண்காட்சி ஏற்பாடுகளை அரபுத் துறை தலைவர் முனைவர் முஹம்மது இஸ்மாயில், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் அரபுத் துறை பேராசிரியர்கள் முனைவர் அப்துல் ரஷீத், முனைவர் ஷமீம் அன்சாரி, முனைவர் ஜாபர் சாதிக், முஹம்மது அபூபக்கர் சித்தீக், முஹம்மது அப்துல் ரஹீம், அரபுத் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்தனர். இந்த கண்காட்சியை பல்வேறு துறை பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications