ஆபாசம்.. அவதூறு! திமுக டிஎன்ஏவிலேயே இருக்கு! அப்படி பேசலைனாதான் ஆச்சர்யம்! அமைச்சர் ரமேஷ் அட்டாக்!
திருச்சி: ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவதை திமுக செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம்.. இதெல்லாம் திமுகவின் டிஎன்ஏவில் இருக்கக் கூடியது. இப்படி பேசினால் திமுக அமைச்சர்கள் எல்லாம் வளர்ந்து உள்ளார்கள் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
விநாயகர் சதுர்ச்சியை முன்னிட்டு திருச்சியில் அமைச்சர் ரமேஷ் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் விஜய் வெளிநாடு சென்றது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

அரசியல் ரீதியான கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம். ஆனால் வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக ஏதாவது பேசுபவர்களுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை.
முதலமைச்சர் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் ஆட்சி நிர்வாகம் செய்து வருகிறார்.
அமைச்சர் ரமேஷ்
உலகம் முழுவதும் விளையாட்டுத் துறையில் தமிழர்கள் சாதிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். அந்த வகையில் முதலமைச்சர் விஜய் நண்பரும் திரையுலகில் நீண்ட காலம் உள்ள அஜித் அவர்களின் கலந்து கொள்ளும் கார் ரேஸ் லண்டன் சென்று முதலமைச்சர் தொடக்கி வைத்தார். தமிழர்களின் பெருமையை உலக அளவில் நிலைநாட்ட வேண்டும் என்கிற அடிப்படையில் முதலமைச்சர் இதை செயல்பட்டு வருகிறார்.
அதிமுக
இதை விமர்சனம் செய்யும் அதிமுகவினர் இன்று எதிர்க்கட்சியாக கூட அமர முடியாத நிலையில் உள்ளார்கள். ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவதை திமுக செய்யவில்லை என்றால் தான் ஆச்சரியம்.. இதெல்லாம் திமுகவின் டிஎன்ஏவில் இருக்கக்கூடியது. இப்படி பேசினால் திமுக அமைச்சர்கள் எல்லாம் வளர்ந்து உள்ளார்கள். முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கட்சியை அப்படித்தான் வளர்த்து உள்ளார்.
சேகர்பாபு
அதற்கு உதாரணம் அவருடைய மகன் தான் அவரே கொச்சைப்படுத்தி பேசுவது இரட்டை அர்த்தத்தில் பேசும் பேச்சுகளை பேசி கூறுகிறார். முதலமைச்சரை மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள பெண்களை பொதுமக்களை யார் இழிவாக பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம். முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். அவர் அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார். அவர் பேச்சிலேயே அறம் இல்லை என்றால், அவருக்கு என்ன தகுதி இருக்கிறது.
தவெக அரசு
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் இந்த மூன்று மாதத்தின் தான் அதிகரித்துள்ளதா கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் சரியாக ஆட்சி செய்யாததின் விளைவாக அவை தொடர்ந்து கொண்டு அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்து வருகிறது பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது போதைப் பொருளை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் இருந்த சீர்கேடுகள் தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறது." என்றார்.


Click it and Unblock the Notifications
