ரீல்ஸ் போடுவதாக அழும் உதயநிதி! நீங்க போடாத ரீல்ஸா? எப்போதும் சினிமா நியாபகம். அமைச்சர் ரமேஷ் அட்டாக்
திருச்சி: என் குடும்பத்தில் யாரிடமும் 2 கோடி ரூபாய் பணம் கிடையாது எனவும், வெறும் 12 லட்சம் ரூபாயை வைத்து தான் சட்டமன்ற தேர்தலில் சந்தித்தேன். என்னிடம் 2 கோடி ரூபாய் பணம் இருக்கிறது என்று சொன்னால் என்னுடைய அம்மா கூட நம்ப மாட்டார்கள் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார். மேலும் சட்டமன்றத்தில் நீக்கப்பட்ட வீடியோக்களை ரில்ஸாக பதிவிடுகிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவர், பேரவை தலைவரிடம் அழுகிறார் எனவும் விமர்சித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் தமிழக வெற்றி கழக அரசின் 100 நாள் நிறைவு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்," நான் சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக ஆவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை. உண்மையான உழைப்பும் திறமையும் இருந்தால் தேடி கண்டுபிடிப்பது தான் நம்முடைய தலைவரின் பொறுப்பு.
அமைச்சர் ரமேஷ்
ஸ்ரீரங்கம் தொகுதி விஐபி தொகுதி. சாதாரண தொகுதி அல்ல. தலைவர் சொன்னார், அதனை ஏற்று நான் என்னிடம் உள்ள 12 லட்ச ரூபாயை ஸ்ரீரங்கத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை நம்பி நின்றேன் வெற்றி பெற்றேன். ஸ்ரீரங்கம் தொகுதியை தமிழகத்தில் நம்பர் 1 தொகுதியாக மாற்றுவேன். எங்கள் கட்சிக்குள் என்ன நடந்தாலும் அண்ணன் தம்பியாக தான் பழகிக் கொண்டிருக்கிறோம். அண்ணன் தம்பிக்குள் ஆயிரம் பிரச்சனை இருக்கலாம் ஆனால் தளபதி என வந்துவிட்டால் அனைவரும் ஒன்றாக தான் இருப்போம். தமிழ்நாட்டில் வலிமையான கட்டமைப்புடன் உள்ள கட்சி தமிழக வெற்றி கழகம் தான்.
தவெக அரசு
பேசுறவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும். தலைவர் செயலில் செய்து காண்பிப்பார். 100 நாள் சாதனை இந்தியாவில் திரும்பி பார்க்கும் அளவிற்கு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். திமுக ஆட்சியில் பெண்கள் சுதந்திரமாக சாலையில் நடமாட முடியாது. அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில்
எங்கள் தலைவர் பேப்பர் எழுதிக் கொடுத்தால் அதை பார்த்தாலே பயப்படும் ஆட்சிதான் இருந்தது. இதற்காகத்தான் சிங்கப்பெண் படை கொண்டுவரப்பட்டது.
முதல்வர் விஜய்
கர்நாடகாவில் அணை கட்டக் கூடாது என சட்ட ரீதியாக அரசியல் முன்னெடுப்பை எடுத்துக் கொண்டிருக்கிறார் நம்முடைய தலைவர். மணப்பாறையில் பேருந்து இல்லை என செய்தியை பார்த்தவுடன் உடனடியாக பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுங்கள் என முன்னவர் எங்கள் தலைவர். எல்லாரும் சொல்லுகிறார்கள் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் என உண்மையிலே அவர் தலைவர். விஜய் எம்ஜிஆர் தான்.. வாத்தியார் தான்.
சட்டப்பேரவை ரீல்ஸ்
சட்டமன்றத்தில் நீக்கப்பட்ட வீடியோக்கள் ரிலீஸ் ஆக பதிவிடுகிறார்கள் என சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சட்டமன்ற பேரவை தலைவரிடம் ஆளுகிறார். இன்ஸ்டாகிராம் ரீல்சை எல்லாம் பார்த்து பயப்படுகிறார்கள். நீங்கள் போடாத மீம்சா ரீல்சா? எங்களுக்கு பொய் சொல்லும் பழக்கம் கிடையாது உண்மை மட்டும் தான் சொல்லுவோம். நினைப்பெல்லாம் சினிமாவில் இருந்தால் சூப்பர் சிங்கர் போன்று தான் தோணும்.எங்கள் அரசை நோக்கி கேள்வி கேட்கும்போது நாங்கள் பதில் சொல்லுவோம். நீங்கள் ஆதாரத்தோடு பேசுங்கள் நாங்கள் பதில் சொல்கிறோம். யார் பதில் சொன்னால் உங்களுக்கு என்ன பிரச்சனை.
உதயநிதி ஸ்டாலின்
அரசு வாகனத்தில் ரோடு ஷோ சென்றுள்ளோம் என எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார். சுதந்திரப் போராட்டத்தில் தியாகம் பண்ணிய தஞ்சாவூருக்கு போனீர்கள்? அவதூறாக ஆபாசமாக பேசி போனீர்கள். அம்மை நோய் குறித்து இரவு 12 மணிக்கு அவதூறாக பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் திமுக காரர்கள். ஆபாசமாக அவதூறாக பேசுகிறார்கள் மக்கள் பிரச்சனை எப்போதுதான் பேசுவார்கள். என் குடும்பத்தில் எவரிடமும் 2 கோடி கிடையாது. 12 லட்சம் வைத்து தான் சட்டமன்ற தேர்தலில் சந்தித்தேன். என்னிடம் இரண்டு கோடி இருக்கிறது என்று சொன்னால் என்னுடைய அம்மாவே நம்ப மாட்டார்" என்றார்.


Click it and Unblock the Notifications
