சொந்தப் பணத்தை தொகுதிக்காக செலவு செய்துள்ளார் பாரிவேந்தர்.. பெரம்பலூருக்கு ரயில் வருது: அண்ணாமலை
திருச்சி: பெரம்பலுர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிட உள்ள நிலையில், ஐஜேகே கட்சியின் மாநாட்டில் பாரிவேந்தருக்கு ஆதரவு திரட்டிப் பேசினார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
இந்திய ஜனநாயகக் கட்சியின் 'தேசம் காப்போம், தமிழை வளர்ப்போம்' மாநில மாநாடு திருச்சி அருகே பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சிறுகனூரில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஏசி சண்முகம், தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்த மாநாட்டில் பங்கேற்றார்.

எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக பெரம்பலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிட தயாராகி வருகிறார். கடந்த முறை திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்று எம்.பியாக இருக்கும் பாரிவேந்தர் மீண்டும் பெரம்பலூரில் களமிறங்க இருக்கிறார். இந்நிலையில் நேற்று அங்கு நடைபெற்ற மாநாட்டில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் பேசிய அண்ணாமலை, "2024 ஆம் ஆண்டு நாம் பேசும், பண அரசியலுக்கு எதிரான, ஊழலற்ற, நேர்மையான அரசியலைக் கொள்கைகளாகக் கொண்டு தொடங்கப்பட்ட இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள், பெரம்பலூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கும் மக்களுக்கும் செய்துள்ள பணிகள் போற்றுதலுக்குரியவை. தனது சொந்தப் பணம் சுமார் 127 கோடி ரூபாய், தொகுதி மேம்பாட்டிற்காகச் செலவு செய்து, இந்தியாவின் தலைசிறந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார்.
பாரிவேந்தரின் முயற்சியால், பெரம்பலூருக்கு ரயில் போக்குவரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் புதிதாகத் தொடங்கவிருக்கும் 100 சைனிக் பள்ளிகளில் முதல் பள்ளி, பெரம்பலூரில் அமைக்கவும், தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்யத் தயாராகவிருக்கிறார். பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, பாரிவேந்தர், மீண்டும் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர் கொண்டு வர முழுமுயற்சி மேற்கொண்டுள்ள அத்தனை திட்டங்களையும், அவரே தொடங்கி வைக்க வேண்டுமென்பதே அனைவரின் ஆசையும் விருப்பமும். அதனை நிறைவேற்ற அனைவரும் நிச்சயம் உழைப்போம்.
இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் அண்ணன் ரவி பச்சைமுத்து, தமது தந்தையாரை விட ஒரு படி மேலாக, தமிழகத்தின் மீதும், மக்களின் மீதும், சமூகத்தின் மீதும் அளவற்ற பற்று கொண்டவர். அவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில மாநாட்டின் கொள்கையான, தமிழ் வளர்ச்சி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கடந்த பத்து ஆண்டு கால ஆட்சியில்தான் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும், தமிழ் மொழியின் பெருமையை நமது பாரதப் பிரதமர் அவர்கள் கொண்டு செல்கிறார். தமிழ் மொழியின் புகழ் மேலும் பரவ, நமது பிரதமர் மோடி அவர்கள், மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க வேண்டும்.
மாநாட்டின் மற்றொரு கொள்கையான தேசம் காப்பது, பிரிவினை பேசும் திராவிட அரசியலை அழிப்பதில்தான் முழுமை பெறும். வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் ஏற்படவிருக்கும் மாற்றம், வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திராவிட அரசியலை வேரோடு அகற்ற அடிப்படையாக அமையும்.
தமிழ் மொழி வளர, தமிழகம் சிறக்க, வளர்ச்சி அரசியலை தமிழகம் முன்னெடுக்கும். இந்திய ஜனநாயகக் கட்சியின் இந்த தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் மாநில மாநாட்டின் மாபெரும் வெற்றி, ஊழலற்ற, நேர்மையான, சாமானிய மக்களுக்கான, தேசியம் சார்ந்த அரசியலைப் பேசும் அனைத்து சக்திகளுக்கும் மாபெரும் உந்து சக்தியாக அமைந்திருக்கிறது." என உரையாற்றினார் அண்ணாமலை.
இந்திய ஜனநாயக கட்சியின் இந்த மாநாட்டில் 1 லட்சம் பேருக்கும் மேல் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும் சுமார் 10 ஆயிரம் - 20 ஆயிரம் பேர் மட்டுமே வந்திருந்தனர். ஏராளமான இருக்கைகள் காலியாக இருந்தன. இது சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
-
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications