சிறுமியை சீரழித்த காக்கி! பரபரப்பான திருச்சி! அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு? அதிர்ந்து போன போலீசார்!
திருச்சி : திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வேலியே பயிரை மேய்ந்த கதையாக ஆதரவற்ற 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கியதோடு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவையும் கலைத்ததாக திருச்சி காவல்துறையில் பணியாற்றும் காவலரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி லால்குடி நன்னிமங்கலம் காலனி வீடு பள்ளிக்கூட தெரு பகுதியைச் சேர்ந்த பெற்றோரை இழந்த 16 வயது சிறுமி, அவரின் பெரியம்மாவிடம் வளர்ந்து வந்துள்ளார். அவரது பெரியம்மா வேலைக்காக வெளியே சென்றுவிடும் நிலையில், அவர் தனியாக வீட்டில் இருப்பது வழக்கம்.
சிறுமி தனியாகத் தான் இருக்கிறார் என்பதை பயன்படுத்தி அப்பகுதியைச் சேர்ந்த போலீஸ்காரர், கலால் துறையில் பணியாற்றும் ஒருவர், உள்ளிட்ட சிலர் சிறுமியிடம் அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சிறுமி கர்ப்பம்
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 24-ம் தேதி சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அன்பில் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரது பெரியம்மா சிகிச்சைக்கு அழைத்து சென்றார். அங்கு நடைபெற்ற பரிசோதனையில் அந்த சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அதைக்கேட்டு அதிர்ந்து போன அவரது பெரியம்மா அதற்கு யார் காரணம் என கேட்டு சிறுமியை அடித்துள்ளார்.

கருக்கலைப்பு
ஆனாலும் சிறுமி சரியான பதில் சொல்லாத நிலையில் சிறுமியை திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிறுமிக்கு 18 வயது என பொய்யாக கூறி கருக்கலைப்பு செய்ததாக தெரிகிறது. இதற்கிடையில் சிறுமியின் வயது குறித்து மருத்துவமனையில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்படவே அவர்கள் இது குறித்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் மாலதி மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்தினார்.

காவலர் கைது
விசாரணையில் வயதை அதிகமாக கூறி கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது. விசாரணையில் சிறுமியை வன்முறை செய்ததாக திருப்பூரை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் மீது வழக்கு பதியப்பட்டது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட காவலர் பிரகாஷ் கடந்த சில நாட்களாக தலைமறைவாகி இருந்த நிலையில் இது குறித்து பிரகாஷின் மனைவி மற்றும் உறவினர்களை அழைத்து விசாரணை நடத்தியதை அடுத்து பிரகாஷ் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று சரணடைந்தார். இதனைத்தொடர்ந்து பிரகாஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

மக்கள் கோரிக்கை
மேலும் சிறுமியிடம் வன்முறையில் ஈடுபட்ட முக்கிய பிரமுகர்களுக்கு காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்து சிறுமியின் கற்பை சூறையாடி அரசியல்வாதிகளும் அரசு பணியிலும் உள்ள பலர் இன்னும் அந்த கிராமத்திலேயே தலைமறையாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. 16 வயது சிறுமியிடம் இதுபோன்று அத்துமீறி நடந்து கொண்டது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications