"மாமியாருக்கு" பாலியல் தொல்லை.. "சபலிஸ்ட்" கணவனை கண்டு அதிர்ந்த மனைவி.. அப்பறம் என்னாச்சு தெரியுமா?
குடித்துவிட்டு தகராறு செய்யும் கணவன் மீது சுடுநீரை ஊற்றி கொலை செய்துள்ளார் மனைவி
திருச்சி: மனைவியை சித்ரவதை செய்துவந்ததுடன், மாமியாருக்கும் பாலியல் தொல்லை தந்து வந்துள்ளார் செல்வராஜ்.. கடைசியில் இப்படி ஒரு சோக முடிவு ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்... மனைவி பெயர் டயானாமேரி.. இவர்களுடன் டயானாவின் அம்மா இன்னாசியம்மாளும் ஒரே வீட்டில் சில காலம் தங்கி இருந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த சில வருடங்களாகவே செல்வராஜுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. செல்வராஜ் குடித்துவிட்டாலே வீட்டில் அட்டகாசம் செய்வாராம்..

மாமியார்
குடித்துவிட்டு வந்து அடிக்கடி மாமியாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் சொல்கிறார்கள்.. இதனால் பலமுறை மாமியார், தன்னுடைய மருமகனை கண்டித்துள்ளார்.. மகளிடம் இதை பற்றி சொல்லவும் அவரும், கணவனிடம் தகராறு செய்து, கண்டித்துள்ளார்.. ஆனாலும், செல்வராஜ் திருந்தாமல் இருந்திருக்கிறார்... இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்குள் வந்துள்ளார் செல்வராஜ்.. மாமியாருக்கு பாலியல் தொல்லையும் தந்திருக்கிறார். இதனால் மனம் வெறுத்துப்போன டயானாவும், இன்னாசி அம்மாளும், பொறுமை இழந்ததுடன் செல்வராஜ்ஜை கடுமையாக சத்தம் போட்டனர்..

அடிவயிறு
அப்போதும் செல்வராஜின் சேட்டை அடங்காததால், கிச்சனுக்கு சென்று சுடு தண்ணீரில், மிளகாய்ப் பொடியை கலந்து கொண்டு வந்து 2 பேரும் செல்வராஜ் மீது ஊற்றியுள்ளனர். இதில் செல்வராஜ் உடல் முழுவதும் வெந்துபோய், வலியால் துடிதுடித்தார். அவரது அலறலை கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து வந்து, செல்வராஜை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்... அங்கு சிகிச்சை பெற்றுவந்த செல்வராஜ், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார்.. செல்வராஜ் மீது சுடுநீரை ஊற்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுமே, இதுகுறித்து திருவெறும்பூர் போலீசுக்கு தகவல் தரப்பட்டது..

டயானா அட்வைஸ்
விரைந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து மனைவி, மாமியார் 2 பேரையுமே விசாரித்து வந்தனர்.. ஆனால், செல்வராஜ் சிகிச்சை பலனின்றி இறந்ததால், இந்த வழக்கை கொலை வழக்கமாக மாற்றி டயானாவையும், இன்னாசி அம்மாளையும் கைது செய்தனர்.தன் அம்மாவுக்கு பாலியல் தொல்லை தரக்கூடாது என்று செல்வராஜுக்கு பலமுறை டயானா அட்வைஸ் செய்துள்ளாராம்.. ஒவ்வொருமுறையும் பொறுமையாக எடுத்து சொல்லியும் அவர் கேட்காததால், ஆத்திரமடைந்த டயானா, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரிடம், கோபித்துக் கொண்டு, அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டாராம்..

மிரண்ட மாமியார்
அதே பகுதியில்தான், டயானா அம்மா இன்னாசியம்மாள் வீடும் உள்ளது.. 3 மாதமாகவே இங்கேயே தங்கிவிட்டவர், கணவர் வீட்டுக்கு திரும்ப செல்லவில்லையாம்.. உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் அதனை டயானா ஏற்கவில்லையாம்.. அதனால்தான், சம்பவத்தன்று மனைவியை அழைத்து வர செல்வராஜ் நேரடியாகவே மனைவியை தேடி மாமியார் வீட்டுக்கு சென்றிருக்கிறார்.. டயானாவை தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார்.. அதற்கு டயானா ஒப்புக்கொள்ள மறுப்பு தெரிவிக்கவும், இது இவர்களுக்குள் தகராறாக வெடித்துள்ளது.

கிட்னி காலி
இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், டயானாவை சரமாரியாக அடித்ததாக தெரிகிறது.. தடுக்க வந்த மாமியாரையும் கடுமையாக தாக்கி உள்ளார்.. இதனால்தான் கோபத்தின் உச்சிக்குச் சென்ற, 2 பேரும் கிச்சனில் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரில் மிளகாய் பொடியை கலந்து கொண்டுவந்து, கொஞ்சமும் யோசிக்காமல் கணவர் மீது ஊற்றியுள்ளார்.. மாமியார் இன்னாசியம்மாளுக்கு 43 வயதாகிறது.. டயானாவுக்கு 22 வயதாகிறது.. ஆத்திரத்தில் சுடுநீர் ஊற்றிவிட்டதால், செல்வராஜின் அடிவயிறு பகுதி வெந்து போயுள்ளது. ஆழமான காயம் ஏற்பட்டதால் கிட்னி பாதித்துவிட்டதாம்.. அவரது இறப்புக்கு இதுதான் காரணம் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.. இப்போது தாயும் - மகளும் ஜெயிலில் உள்ளனர்..!!!
-
17 வயது சிறுவனுடன் காதல் திருமணம்.. 22 வயது இளம்பெண்ணுக்கு ஊர் பஞ்சாயத்து கொடுத்த விபரீத முடிவு! -
இப்படியா நடக்கனும்.. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி! சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்! -
குமுறுது கும்மிடிப்பூண்டி.. 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை? முட்புதரில் வீசிச் சென்ற கொடூரன்கள்! -
அண்ணி மீதான மோகம்.. இளைஞரை எரித்து கொன்ற வழக்கில் பெரிய ட்விஸ்ட்! ஷாக் காரணம் -
லண்டனில் கேள்விக்குறியாகும் இந்தியர்களின் நிலை.. 26 வயது இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! -
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
“முதல்வர் விஜய் கையில் இருக்கும் காவல்துறை.. கட்சிக்காரர்களுக்கு பயம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி -
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகர் பயிற்சி பற்றி விஷமத்தனமான கருத்து.. அறநிலையத் துறை விளக்கம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications