சின்ன வெங்காயம் வாங்க.. திருச்சி ஜெயிலுக்கு வாங்க.. கிலோ எவ்வளவு தெரியுமா?
திருச்சி: திருச்சி சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் கைதிகள் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்டது.
திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என சுமார் 1,500 பேர் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் இதில் ஆயுள் தண்டனை பெற்று பல ஆண்டுகளாக சிறையிலுள்ள கைதிகளில் நன்னடத்தை அடிப்படையில் சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு சிறை வளாகத்தில் உள்ள தோட்டங்களிலும், தொழில் கூடங்களிலும், சிறை அங்காடிகளிலும் பணி வழங்கப்பட்டு வருகிறது.

இதில் பணி புரிவதன் மூலம் அவர்களுக்கு கிடைக்கும் குறிப்பிட்ட தொகை சம்பந்தப்பட்ட கைதிகளின் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
ஆண்டு தோறும் சிறை வளாகத்தில் உள்ள தோட்டத்தில் காய்கறிகள், நெற்பயிர்கள், கரும்பு போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சின்ன வெங்காயமும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்த ஆண்டு கைதிகளால் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டது. அதில் சுமார் 500 கிலோ சின்ன வெங்காயம் உற்பத்தி ஆகி உள்ளது. இயற்கை உரங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தை சிறை அங்காடியில் பொதுமக்களுக்கு கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்து வருகிறார்கள். அவற்றை பொதுமக்கள் வாங்கி பயன் அடைய வேண்டும் என சிறைத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
முன்னதாக சின்ன வெங்காயம் அறுவடை நிகழ்ச்சியில் திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. கனகராஜ், சிறை சூப்பிரண்டு சங்கர், சிறை அங்காடி சூப்பிரண்டு திருமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications