"சாதி சண்டை"க்கு காரணமே திமுகதான்.. காடுவெட்டி தியாகராஜனை விரட்டும் அதிமுக.. திகைப்பில் திருச்சி
திருச்சி: பெண்களை இழிவாக பேசிய திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து திருச்சியில் அதிமுக சார்பில் இன்றும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
திருச்சியின் வடக்கு மாவட்ட திமுகவின் செயலாளராக இருப்பவர் காடுவெட்டி தியாகராஜன்.. இவர் சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.. அதில், குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள் குறித்தும் காவல்துறை குறித்தும் அவதூறாக பேசியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆடியோவுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பலரும் அந்த தியாகராஜன் பேச்சுக்கு கண்டனங்களை தெரிவித்திருந்தனர். ஆனால், அந்த ஆடியோவில் பேசியது தான் அல்ல என்று காடுவெட்டி தியாகராஜன் விளக்கம் தந்திருந்த நிலையிலும், அவர் மீதான கண்டனங்களும், எதிர்ப்புகளும் பெருகியபடியேதான் உள்ளன. சாதி சண்டைக்கு எப்போதுமே திமுகதான் காரணமாக இருந்து வருகிறது என்றும், இவர்களால்தான் மோதல்கள் ஏற்படுவதாகவும், இணையத்தில் எதிர்ப்பு கருத்துக்களும் பெருகியபடியே உள்ளன.
தியாகராஜனின் சர்ச்சை பேச்சு தொடர்பாக, அவர் மீது போலீசில் புகாரும் தரப்பட்டது.. எனினும், தியாகராஜனை கண்டித்து 2 நாளைக்கு முன்புகூட, திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்சோதி தலைமையில், போராட்டம் நடந்தது.. தாயாகவும் சகோதரியாகவும் மதிக்க வேண்டிய பெண்களை இழிவாகவும், காவல்துறையை தரக்குறைவாகவும் பேசிய திமுக வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்து, பெட்டவாய்த்தலை பஸ் ஸ்டாண்டில் இந்த போராட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக திருச்சி அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஏற்பாட்டில், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள அண்ணா சிலை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கலந்துகொண்டு திமுகவிற்கு எதிராகவும், திமுக மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜனை கண்டித்தும், அவரைக் கைது செய்யக் கோரியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக தலைமை நிலையப் பேச்சாளர் நெத்தியடி நாகேந்திரன், மாவட்ட பொருளாளர் மலைக்கோட்டை ஐயப்பன், மாவட்ட துணை செயலாளர் ஜாக்குலின், ஆவின் தலைவர் கார்த்திகேயன், உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
-
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் ராஜினாமா.. குதிரை பேரமா? ஐகோர்ட் கேட்ட கேள்வி! தீர்ப்பு ஒத்திவைப்பு -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்!












Click it and Unblock the Notifications