திமுக வட்டச் செயலாளருக்கு.. வீட்டு வாசலிலேயே கத்திகுத்து.. திமுக பகுதி செயலாளர் மீது பரபரப்பு புகார்
திருச்சி: திருச்சியில் திமுக வட்டச் செயலாளர் கண்ணன் என்பவர் கொடூர ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி திருவனைகாவல் பகுதி சேர்ந்தவர் கண்ணன். இவர் தி.மு.க.வின் வட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். நேற்று இரவு இவரது வீட்டுக்கு சென்ற மர்ம நபர்கள், திமுக பகுதி செயலாளர் ராம்குமார் உங்களை அழைத்து வர கூறினார் என தெரிவித்து உள்ளனர்.
உங்களிடம் கட்சி ரீதியாக சில விஷயங்கள் பேச வேண்டும், உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டும் என்று ராம்குமார் கூறினார் என்று கூறி கண்ணனை அந்த கும்பல் அழைத்து சென்றுள்ளது.

தாக்குதல்
அந்த மர்ம கும்பலோடு வெளியே சென்ற கண்ணன் வீட்டு வாசலிலேயே கொடூர ஆயுதங்களால் தாக்கப்பட்டார். வீட்டிற்கு வெளியே நின்ற கும்பல் அவரை கத்தியால் குத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது. கொடூரமாக தாக்கப்பட்ட கண்ணன் அங்கேயே சுருண்டு விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த கண்ணன் உடனடியாக திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காசு
கண்ணனுக்கும் திருச்சி மாவட்ட திமுக பகுதி செயலாளர் ராம்குமாருக்கும் ஏற்கனவே மோதல் இருந்ததாக கூறப்படுகிறது. .திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டிற்கு வேன்களில் தொண்டர்களை அழைத்து செல்ல கண்ணன் ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக அவர் சொந்த காசில் செலவு செய்துள்ளார். இதையடுத்து திமுக பகுதி செயலாளர் ராம்குமாரை நேற்று காலை சந்தித்த கண்ணன் வேன் வாடகைக்காக எனது நகையை அடமானம் வைத்து கொடுத்தேன்.

மோதல்
இப்போது என் கையில் காசு இல்லை. தற்போது நகை மூழ்கும் நிலையில் உள்ளது. எனவே நான் கூட்டத்திற்கு செலவு செய்த பணத்தை நீங்கள் திருப்பி கொடுக்க வேண்டும். பணத்தை கொடுக்காமல் இழுத்து அடித்தால் அமைச்சர் கே.என்.நேருவிடம் நேரில் புகார் தெரிவிப்பேன் என கூறியதாக கூறப்படுகிறது.

விசாரணை
இதை தொடர்ந்துதான் நள்ளிரவு கண்ணன் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக பகுதி செயலாளர் ராம்குமார் இதில் விரைவில் விசாரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications