Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏலே இப்டி பண்றீங்க..நாசமா போயிருவீங்க! இனிதான் சாதனாவோட ஆட்டமே! காண்டான திருச்சி சாதனா! என்ன காரணம்?

Subscribe to Oneindia Tamil

திருச்சி : ஆபாசமாக பேசியோ, அடுத்தவர்களை தரக்குறைவாக பேசியோ இனிமேல் வீடியோவில் போட மாட்டேன் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேசி இருந்த டிக்டாக் புகழ் திருச்சி சாதனா, தற்போது பேப்பர் ஐடி என்ற நபரை மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழகத்தில் டிக்டாக் மூலம் பிரபலமடைந்தவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் நன்மைகள் இருந்தாலும், ஒரு பக்கம் கைதாகும் அளவுக்கு குற்ற நடவடிக்கைகளும் அதிகரிக்கிறது. திருச்சி சாதனா,திவ்யா, ஜி.பி முத்து என பலர் இந்த வரிசையில் உள்ளார்கள்.

டிக்டாக்கிற்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து என்ன செய்வது என்று புலம்பிய நிலையில் ஒவ்வொரு டிக் டாக் பிரபலங்களும் யூடியூப், இன்ஸ்டா, பேஸ்புக் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களிலும் தங்களது வீடியோக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

திருச்சி சாதனா

திருச்சி சாதனா

இந்த வரிசையில் அனைவருக்கும் மிகவும் தெரிந்த நபர்களில் ஒருவர் தான் திருச்சி சாதனா. கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் திருச்சி சாதனா. கடந்த 2 ஆண்டுகளுகு முன்னர் டிக்டாக் செயலி மூலம் பிரபலமான இவர், கொரோனா காலத்தில் அது தடை செய்யப்பட்ட பின்னர் ஃபேஸ்புக், இன்ஸ்டா ரீல்ஸ், யூட்யூப் என வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். டிக்டாக் தொடக்கத்தில் கிராமப்பெண்களிடம் இவ்வளவு நடிப்புத்திறமை உள்ளதா? என அனைவரையும் வியப்புடன் பார்க்க வைத்தவர்தான் திருச்சி சாதனா..

ஆபாச பேச்சு

ஆபாச பேச்சு

இதோடு இவரது வீடியோவைப்பார்க்கும் ஒவ்வொருவரும் அக்கா உங்களுக்கு சின்னத்திரை அல்லது வெள்ளித்திரையில் நல்ல எதிர்காலம் உள்ளது என்பது போன்ற பல கமென்ட்களையெல்லாம் தெறிக்க விட்டார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளிக்கும் வீடியோவை பதிவிட்டதோடு, ஃபேஸ்புக் லைவ்வில் அறைகுறை ஆடைகளோடு, ஆபாசமாக பேசி தொடர்ச்சியாக வீடியோ போட்டு வந்தார்.

போலீசார் எச்சரிக்கை

போலீசார் எச்சரிக்கை

இதனையடுத்து திருச்சி சாதனாவை குளித்தலை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார், விசாரணை நடத்தி தனிப்பட்ட முறையில் அறிவுரைகளை வழங்கியுள்ளனர். உடனே 'நான் இதுபோன்ற ஆபாச வீடியோக்களை வெளியிட மாட்டேன்' என்று எழுத்துபூர்வமாக உறுதியளித்த சாதனா, அதையே பேசி ஒரு வீடியோவாகவும் வெளியிட்டார். ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என சொன்னது போல் சில நாட்கள் மட்டுமே அமைதியாய் இருந்த சாதானா மீண்டும் வேலையை காட்டி வருகிறார்.

மீண்டும் வீடியோ

மீண்டும் வீடியோ


இரு நாட்களுக்கும் முன்னர் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்," அதில் பேசிய அவர் ஏன் இப்படி பண்றீங்க ஒரு பாட்டு பாட முடியல.. ஒரு வீடியோ போட முடியல, ஒரு டான்ஸ் ஆட முடியல.. எந்த வீடியோ போட்டாலும் பேப்பர் ஐடி அப்படிங்கற பேர்ல வந்து கேவலம் கேவலமா கமென்ட் பண்ணுறீங்க. என்ன சாவடிக்குறீங்க.. கருமம் புடிச்ச பயலுகளா, நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க.. நாசமா போயிடுவீங்க... இனிமேதான் திருச்சி சாதனாவோட ஆட்டத்தை பார்க்க போறீங்க" எனப் பேசியுள்ளார். இனிமேல் ஆபாசமாக பேச மாட்டேன் என சத்தியம் செய்யாத குறையாக வீடியோ போட்ட திருச்சி சாதனா தற்போது அவன் இவன் என ஒருமையில் பேசி கடுமையாக திட்டி வெளியிட்டுள்ள வீடியோவை பலரும் கடும் கண்டனங்கள் உடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+