மண்டியிட்டு பிரார்த்தனை.. திருச்சியில் தவெக தலைவர் விஜய் ‘ரோடு ஷோ’வுக்கு மத்தியில் சர்ச் விசிட்!
திருச்சி: தவெக தலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டுள்ளார். அதற்கிடையே, திருச்சி அந்தோணியார் ஆலயத்தில் விஜய் பிரார்த்தனை மேற்கொண்டார். ஆலயத்தில் மண்டியிட்டு விஜய் பிரார்த்தனை செய்தார். ஆலயத்தில் பிரார்த்தனை செய்து முடித்த பிறகு விஜய் மீண்டும் ரோடு ஷோ புறப்பட்டார். விஜய்யை பார்க்க வழிநெடுக தவெக தொண்டர்கள் உற்சாகமாக திரண்டு இருந்தனர்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சார களம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடுகிறார். இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பரப்புரை செய்து வருகிறார்.
கடந்த 2 ஆம் தேதி திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்த விஜய், அன்றைய தினம் மரக்கடை காந்தி மார்க்கெட் அருகே பிரசாரம் செய்தார். அதன்பிறகு விஜய் மற்ற மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு. அங்கு போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தொடங்கினார்.
திருச்சி கிழக்கில் போட்டியிடும் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி, போட்டு கொண்டு தொகுதி முழுவதும் வலம் வந்து வாக்கு சேகரித்து வரும் நிலையில், திருச்சி கிழக்கில் போட்டியிடும் விஜய் மீண்டும் பிரசாரம் செய்ய வருவாரா என்ற எதிர்பார்ப்பு தவெக தொண்டர்களிடம் ஏற்பட்டது.
இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் விசில் ஊதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று விஜய் திருச்சிக்கு வந்தார்.
திருச்சி விமான நிலையம் வந்தடைந்த விஜய், விமான நிலையத்தில் இருந்து தனது பரப்புரை வாகனத்தின் மீது நின்றவாறு சாலை மார்க்கமாக பிரசாரம் நடைபெறும் இடத்திற்கு சென்றார். இந்த ரோடு ஷோவில் ஆயிரக்கணாக்கான தவெக தொண்டர்களும், பொதுமக்களும் வழிநெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திறந்த வாகனத்தில் நின்றபடி ரோடு ஷோ சென்ற விஜய்க்கு பொதுமக்களும்,தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையம், வயர்லெஸ் சாலை, கே.கே.நகர், காஜாமலை, கோழிப்பண்ணை சாலை, கொட்டப்பட்டு, விமான நிலையம் வரை ரோடு ஷோ சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
இதற்கிடையே, பரப்புரைக்காக திருச்சி சென்றுள்ள தவெக தலைவர் விஜய் அங்குள்ள அந்தோணியார் ஆலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். ஆலயத்தில் மண்டியிட்டு விஜய் பிரார்த்தனை செய்தார். ஆலயத்தில் பிரார்த்தனை செய்து முடித்த பிறகு விஜய் மீண்டும் ரோடு ஷோ புறப்பட்டார்.
விஜய்யை பார்க்க வழிநெடுக தவெக தொண்டர்கள் உற்சாகமாக திரண்டு இருந்தனர். வழியில் அவருக்கு ஏராளமானோர் நினைவு பரிசு வழங்கினர். மலர்களையும், மாலைகளையும், கலர் காகிதங்கள் மற்றும் கட்சிக் கொடிகளை வீசினர். தேர்தலுக்கு இன்றும் 4 நாட்களே உள்ள நிலையில், இறுதிக்கட்ட பரப்புரையில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.
-
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
களத்தில் இறங்கிய எடப்பாடி.. தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு! -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்! -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
விஜய்யை அவமானப்படுத்திய கர்நாடக காங்., அமைச்சர் யுடி காதர்? வரவேற்க போய் பூங்கொத்து கூட கொடுக்கலையே! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
திருச்சி வரும் பிரபல ஷூ தயாரிப்பு நிறுவனம்.. 13,364 பேருக்கு வேலை ரெடி.. ரூ.1,379 கோடி முதலீடு -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது!











Click it and Unblock the Notifications