Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“நாங்க வேற மாறி வேற மாறி”, போலீசின் கையை கடித்த அஜித் ரசிகர்கள்..திருச்சியில்“வலிமை” அட்ராசிட்டி..!

Subscribe to Oneindia Tamil

திருச்சி : நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான வலிமை திரைப்பட வெளியீட்டின்போது திருச்சியில் பட்டாசு வெடித்ததை கண்டித்த காவல்துறையினரை கடித்து வைத்த அஜித் ரசிகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் நேற்று பக்கா மாஸாக வெளியிடப்பட்டது.

இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் பல நாட்களாக தவம் கிடந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பலனாக நேற்று பிரம்மாண்டமாக வலிமை திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

அஜித்தின் வலிமை

அஜித்தின் வலிமை

தன்னை தல என அழைக்க வேண்டாம் என அஜித்குமார் கூறினாலும் தல எங்களுக்கு எப்போதும் தல தான் என சொல்லி வெற்றி முழக்கமிட்ட ரசிகர்கள் தியேட்டர் வாசல்களில் பாலாபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டங்களை முன்னெடுத்தனர். தொடர்ந்து ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே "வேற மாறி" பாடலுக்கு தியேட்டரே குலுங்கியது.

கலவையான விமர்சனம்

கலவையான விமர்சனம்

இருந்தும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது. படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் இருந்தாலும் இரண்டாம் பாதி சென்டிமென்டாக மட்டுமே இருப்பதாகவும் அஜித் ரசிகர்களை தவிர மற்றவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என சிலர் பதிவிட்டு வருகின்றனர். இருந்தாலும் படம் வேற லெவல் ஹிட் என அஜித் ரசிகர்கள் பதில் அளித்து வரும் நிலையில் இரண்டாம் நாளில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை என சில தியேட்டர்களில் தகவல் வெளியாகி உள்ளது.

ரசிகர்கள் கைது

ரசிகர்கள் கைது

இந்த நிலையில் திருச்சியில் அஜித் ரசிகர்கள் இருவரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அதன் பின்னணி விசாரித்தபோதுதான் சிரிப்பை ஏற்படுத்தும் தகவல் ஒன்றும் வெளியானது. திருச்சி அருகே வலிமை படத்தின்போது வெடி வெடித்ததை தடுத்த போலீஸாரை கடித்த அஜித் ரசிகர்கள் இருவர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். திரைப்பட நடிகர் அஜித் நடித்த திரைப்படம் லால்குடியில் உள்ள அன்பு சினிமா தியேட்டரில் நேற்று வெளியானது . இந்த படத்தினை காண அஜித் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து உற்சாகத்தின் வெளிப்படையாக சினிமா தியேட்டரில் முன்புறமுள்ள லால்குடி ரயில்வே மேம்பால அனுகு சாலையில் வெடி வெடித்து கொண்டாடினர்.

கையை கடித்த ரசிகர்கள்

கையை கடித்த ரசிகர்கள்

அப்போது அங்கிருந்த போலீசார் வெடி வெடித்த இளைஞர்களை எச்சரித்தும் மீண்டும் வெடி வெடித்து ஆரவாரம் செய்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இளைஞர்களை கண்டித்துள்ளனர். அப்போது அந்த இரு இளைஞர்களும் காவலர் சுரேஷ் என்பவரின் வலது கையினை கடித்து காயப்படுத்தினர். இதனால் காயம் அடைந்த போலீசார் சுரேஷ் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் . போலீசார் சுரேஷை கடித்த அஜித் ரசிகர் டால்மியாபுரத்தைச் சேர்ந்த அருண் குமார் மற்றும் கோபிநாத் ஆகிய இருவரையும் லால்குடி போலீசார் கைது செய்து லால்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவின் கீழ் முசிறி கிளைச் சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+