அங்கிட்டு எடப்பாடி பழனிசாமி.. இங்கிட்டு உதயநிதி ஸ்டாலின்.. திணறும் மலைக்கோட்டை மாநகரமாம் திருச்சி!
திருச்சி: எடப்பாடி பழனிசாமியும் உதயநிதி ஸ்டாலினும் ஒரே நாளில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் அவர்கள் இருவரையும் வரவேற்க திமுக, அதிமுகவினர் பெருமளவில் திருச்சியில் குவிந்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திருச்சி வருகிறார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஏற்பாட்டில் மணப்பாறையில் நடைபெறும் ஐம்பெரும் விழாவில் கலந்துகொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் திருச்சி வருகிறார்.

உதயநிதி ஸ்டாலின்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மணப்பாறையில் இன்று மாலை ஐம்பெரும் விழா நடத்துகிறார் மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுகவின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குவதுடன் அகில இந்திய அளவில் நடைபெற்ற கபடி போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளும் அளிக்கிறார்.

40 ஆண்டுகால கோரிக்கை
இதேபோல் மணப்பாறை பகுதி மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையான அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்ததற்காக முதல்வருக்கு பாராட்டு என ஐம்பெரும் விழாவாக உதயநிதி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முன்னதாக திருச்சிக்கு வருகை தரும் உதயநிதி ஸ்டாலினை வரவேற்க திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், என நான்கு மாவட்டங்களில் இருந்தும் இளைஞரணி நிர்வாகிகள் திரண்டிருப்பதால் விமான நிலையம் களை கட்டியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி
இதனிடையே எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி அதிமுக முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை திருச்சி வருகிறார். இதனால் அவரை வரவேற்கவும் அதிமுகவினர் பெருமளவில் திருச்சியில் திரண்டிருக்கிறார்கள். அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளில் இருந்தும் முக்கிய வி.ஐ.பி.க்கள் ஒரே நேரத்தில் திருச்சிக்கு வருவதால் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளனர்.

கோவை நிகழ்வு
இதனிடையே மூன்று நாட்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் அதே நாளில் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றிருந்தார். இன்று உதயநிதி திருச்சிக்கு வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
26 வயது கொத்தனாருக்கு திருச்சியில் விழுந்த மரண அடி! காமுகர்களுக்கு நீதிபதி ஜெயந்தி தந்த சரியான பாடம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?












Click it and Unblock the Notifications