கோவில்பட்டியில் 10 நாளாக பள்ளி செல்லாத சிறுவன்! 1.5 பவுனுடன் மாயம்! மொட்டை மாடியில் அதிர்ச்சி!
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் நேற்று மாயமான நிலையில் அவனது வீட்டின் அருகேயுள்ள உள்ள மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் வசித்து வரும் தம்பதியினர், இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன .

மூத்த மகன் 7 ம் வகுப்பும் இரண்டாவது மகன் 5 ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இருவருமே அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் 5ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளான் .
இந்நிலையில் நேற்று காலை வீட்டில் பெற்றோர் மகனுக்கு உணவளித்துவிட்டு இருவரும் கூலி வேலைக்கு சென்று விட்டனர். பெற்றோர் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய போது திடீரென மாயமாகி விட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். அந்த சிறுவனை அக்கம் பக்கத்தில் தேடினர்.
அப்போது சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர், தெரிவித்தனர். இந்த நிலையில் மாயமான சிறுவனின் கழுத்தில் ஒன்றரை பவுனில் செயினும் 1 கிராமில் மோதிரமும் அணிந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பள்ளி மாணவன் மாயமானது குறித்து உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் போலீசார் என தேடி வந்த நிலையில் இன்று அதிகாலை பக்கத்து வீட்டில் மொட்டை மாடியில் சடலமாக கிடந்து உள்ளான்.
இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டார், இதுகுறித்து போலீசாருக்கும் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டனர். இதனையடுத்து மயங்கிய நிலையில் அசைவற்று கிடந்த சிறுவன் மீட்கப்பட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
தொடர்ந்து பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து ஆறு மணி நேரமாகியதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர்கள், உறவினர்கள் மருத்துவமனையில் சிறுவனின் உடலை கண்டு கதறினர்.
மாயமான சிறுவன் நகைக்காக கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications