தூத்துக்குடியை அலறவிட்ட 5 அடி முதலை.. ஏரல் வாய்க்காலில் தோன்றியதுமே.. அதிர்ச்சி வீடியோ நிஜமா?
தூத்துக்குடி: வனத்துறை, நீர்நிலைகளில் சுற்றியிருக்கும் பகுதிகளில் வசிக்கும் மக்கள், இரவு நேரங்களில் வெளியில் நடமாடவே அச்சப்படுகிறார்கள்.. காரணம், அங்கு வாழ்ந்து வரும் விலங்கினங்கள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்துவிடுவதுண்டு.. எனவேதான், சுற்றுலா பயணிகளையும் மேற்கண்ட பகுதிகளில் கவனமுடன் பயணிக்க சொல்கிறார்கள்.. இந்நிலையில், தூத்துக்குடியில் நடந்த சம்பவம் இணையத்தில் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை தந்து வருகிறது. இதன் உண்மைத்தன்மை என்ன?
நீர்நிலைகளில் மட்டுமே வாழும் முதலைகள், சிலசமயம் திடீரென குடியிருப்பு பகுதிகளுக்கு வந்துவிடுகின்றன.. கடந்த 10, 15 வருடங்களுக்கு முன்பு வரை, வாய்க்கால் குளங்களில் கரைகளில் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடு, மாடுகளை மட்டுமே கடித்து வந்த நிலையில், இப்போதெல்லாம் மனிதர்களையும் கடிக்க துவங்கிவிட்டது.

நீர் நிலைகளில் குளிக்க செல்பவர்கள், ஆற்றை கடப்பவர்கள் முதலை வாயில் சிக்கி உயிரிழக்கும் கொடுமை சம்பவங்கள் நடந்து பொதுமக்களை பதைபதைக்க செய்கின்றன.
நீர்நிலைகளில் முதலை
முதலைகளை சர்வ சாதாரணமாக பார்க்க வேண்டுமானால் சிதம்பரம் பகுதியில் பார்க்கலாம்.. நீர்நிலைகள் மட்டுமல்லாமல் புதர்களில் முதலைகள் மறைந்து வாழ்வதுண்டு.. அதனால்தான் கடந்த 20 வருடங்களாகவே சிதம்பரம் பகுதியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கை எழுந்துவருகிறது.
ஆனால், அதிமுக, திமுக என 2 ஆட்சியிலுமே இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று வருத்தத்துடன் சொல்லி வருகிறார்கள் சிதம்பரம் பகுதி மக்கள்.
எனினும் முதலைகள் சம்பந்தப்பட்ட வீடியோக்களுக்கு மட்டும் பஞ்சம் இருப்பதில்லை.. அதிலும் கோடைக்காலத்தில் முதலைகள் சாலைகளில் கேஷூவலாக நடந்து போகும் வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் அவ்வப்போது வைரலாகிவிடுவதும் உண்டு..
தூத்துக்குடி ஏரல் 5 அடி நீளம் முதலை
இப்போதும் ஒரு முதலை வீடியோ வெளியாகி பலரும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சூளை வாய்க்காலில் 5 அடி நீளம் உள்ள முதலை சுற்றித் திரிவதாக வீடியோ ஒன்றை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்து பதறிப்போன இணையவாசிகள், தூத்துக்குடியில் முதலையா? என்று அதிர்ச்சி கமெண்ட்களை பதிவிட துவங்கிவிட்டனர்..
பிறகு இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.. அப்போதுதான், இந்த வீடியோ பொய் என்பதே தெரியவந்தது.
இப்படியொரு சம்பவமே தூத்துக்குடியில் நடக்கவில்லை என்றும், வேறு இடத்தில் நடந்த சம்பவத்தை, ஏரலில் நடந்ததாக பரப்பி வருகிறார்கள்.. அது முற்றிலும் தவறானது, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தீயணைப்புத் துறையினர் மற்றும் அதிகாரிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பண்ணாரியில் பைக் மீது பாய்ந்த புலி
இப்படித்தான் ஈரோடு சத்தியமங்கலத்தில் நடந்ததாக, 10 நாட்களுக்கு முன்பு ஒரு வீடியோ பரவியது.. அதாவது காட்டிலிருந்து புலி ஒன்று வெளியேறி, பண்ணாரியில் இருந்து திம்பம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உட்கார்ந்து விட்டது..
சாலையில் கெத்தாக உட்கார்ந்திருந்த புலியை பார்த்து, கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். புலி இருப்பது , ஒரு தம்பதி பைக்கில் பண்ணாரி நோக்கி வந்துள்ளனர். திடீரென புலி அவர்கள் மீது பாய்ந்துள்ளது.
உடனே தம்பதி இருவரும் பைக்கில் இருந்து எகிறி குதித்து, அலறி கொண்டே சாலையில் ஓடியிருக்கிறார்கள்.. ஆனால் இவர்களது அலறல் சத்தத்தை கேட்டதுமே அந்த புலி காட்டுக்குள் போய்விட்டதாம்.. இதை அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டு, காண்போரை நடுநடுங்க செய்துவிட்டனர்.
கிலி தந்த புலி
ஆனால், இப்படி கிலியை தந்த புலியின் வீடியோ பொய்யானதாம்.. இது தொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம், விளக்கம் ஒன்றை தந்திருந்தது..
அதில், "கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி மராட்டிய மாநிலம் தடோபா அந்தரி புலிகள் சரணாலய வனப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளை புலி ஒன்று துரத்தியுள்ளது. இந்த தகவலை தடோபா வனத்துறை உறுதி செய்துள்ளது. அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சத்தியமங்கலம் என்று குறிப்பிட்டு பரப்பி வருகிறார்கள். வதந்திகளை நம்பவேண்டாம்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. அதற்கு பிறகே சத்தியமங்கலத்துக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது நினைவிருக்கலாம்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications