ஆயிரம் தாமரை மொட்டுக்களே.. சினிமாவிலேயே தாமரையை மலர வைத்தவர் கார்த்திக்.. தமிழிசை வாவ் பேச்சு!!

ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்று பாட்டு பாடி சினிமாவில் கூட தாமரையை மலர வைத்தவர்தான் கார்த்திக் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசி இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அப்பவே தாமரையை மலர வைத்தவர் தான் கார்த்திக் - தமிழிசை- வீடியோ

    தூத்துக்குடி: ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்று பாட்டு பாடி சினிமாவில் கூட தாமரையை மலர வைத்தவர்தான் கார்த்திக் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசி இருக்கிறார்.

    தூத்துக்குடி தொகுதியில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார். தூத்துக்குடியில் திமுக கூட்டணி சார்பாக திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி போட்டியிடுகிறார். இவர்களுக்கு இடையில் மிக கடுமையான போட்டி நிலவுகிறது.

    Actor Karthik already made Lotus to blossom in Tamilnadu says BJP chief Tamilisai

    இந்த நிலையில் மக்கள் உரிமை காக்கும் கட்சி நிறுவனர் நடிகர் கார்த்திக் தமிழிசை சௌந்தரராஜனுக்காக பிரச்சாரம் செய்தார். இந்த தேர்தலில் கார்த்திக் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க போவதாக தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து கோவில்பட்டி மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் கார்த்திக், தமிழிசைக்காக பிரச்சாரம் செய்தார். அவர் தனது பேச்சில், கருப்பு பணத்தை ஒழிக்கவேண்டும். ஆனால் அதற்கான சக்தி எதிர்க்கட்சிகளுக்கு கிடையாது. அது தற்போது பாஜக கூட்டணியிடம் மட்டுமே இருக்கிறது.

    நாம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நாடு முன்னேற வேண்டும். அப்படி நடக்க வேண்டும் என்றால், நாம் நல்லவரை தேர்வு செய்ய வேண்டும். நாட்டை நேசிப்பவர்களை தேர்வு செய்ய வேண்டும். நமது முன்னோர்கள் நீங்க எல்லாம் கொள்ளையடிப்பதற்காகவா போராடி நமக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள், என்று பேசினார்.

    இதையடுத்து அதே பிரச்சாரத்தில் பேசிய தமிழிசை, பாஜக கூட்டணி மிகவும் வலிமையாக இருக்கிறது. லோக்சபா தேர்தலில் பாஜக மிகவும் வலுவான வெற்றியை பெற்று ஆட்சியை அமைக்கும்.

    தூத்துக்குடி வரை வந்து எனக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த சகோதரர் மற்றும் நண்பர் கார்த்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தாமரைக்கு வாக்கு கேட்க வந்திருப்பதற்கு அவர் மிக பொருத்தமானவர். தமிழகத்தில் தாமரையை அவர் ஏற்கனவே மலர செய்தவர்.

    எப்படி என்றால், சினிமாவில் ஆயிரம் தாமரை மொட்டுக்களே என்ற பாடல் மூலம் தாமரையை மலரச் செய்தவர்தான் நடிகர் கார்த்திக் என்று தமிழிசை குறிப்பிட்டார். இதையடுத்து அங்கிருந்த கூட்டத்தில் பெரிய அளவில் கரகோஷம் எழும்பியது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+