“டபுள் டுவிஸ்டு” - கொளுத்திப்போட்ட சிவி சண்முகம்.. கோபப்பட்ட அண்ணாமலை! கடம்பூர் ராஜு புதிய விளக்கம்
தூத்துக்குடி: பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்கும் என்று பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்தை 3 ஆம் கட்டத் தலைவர் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சையாகி இருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ புதிய விளக்கத்தை அளித்து உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சொர்ணா கல்லூரியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் சொர்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஜெபின் ஜோஸ் தலைமையில் பொறியாளர் சந்தனராஜ், அஜந்தா நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சுல்தான் அலாவுதீன் கலந்துகொண்டனர்.
கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் அதிமுகவை சேர்ந்த செய்தி மற்றும் விளம்பரத்துறை முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கேக் வெட்டிய கடம்பூர் ராஜு
இந்த விழாவில் கிறிஸ்துமஸ் கேக்கை வெட்டிய கடம்பூர் ராஜு கலை இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், வர்த்தக அணி பிரிவு காமராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி, மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் அழகர்சாமி, பழனி குமார், பழனி முருகன், முருகன், கோபி உள்ளிட்ட சொர்ணா கல்லூரி ஆசிரியர்கள் கல்லூரி மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.

ஓ பன்னீர்செல்வம் சவால்
அதன் பின்னர் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தனிக்கட்சி துவங்கி பாருங்கள் என்று ஒ பன்னீர்செல்வம் சவால் விட்டு இருப்பது அவருடைய ஏமாற்றத்தின் வெளிபாடு. எடப்பாடி பழனிசாமி தனி கட்சி துவங்க வேண்டிய அவசியம் இல்லை.

பாஜக அதிமுக கூட்டணி
பொதுக் குழுவின் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் அங்கீரித்து உள்ளது. பாஜக அதிமுகவுடன்தான் கூட்டணி என்று கூறி உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தான் உண்மையான அதிமுக. அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டவர்கள் நடத்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தால், கூட்டணி குறித்து பேசுவதில் தனி பாதையை நோக்கி செல்வதற்கு வழி வகுக்குமே தவிர அவர்கள் நடத்தும் கூட்டம் அதிமுகவை கட்டுபடுத்தாது." என்றார்.

துரை வைகோ மீது விமர்சனம்
கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுபன்றிகளால் பயிர்கள் சேதம் அடைந்து வருவதாகவும், இது குறித்து தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எதுவும் செய்யவில்லை என பேசிய மதிமுக தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, தற்போதைய ஆட்சியாளர்களின் கைக் கூலியாகவே செயல்பட்டு வருகிறார்.

அரசியலில் கத்துக்குட்டி
வில்லிசேரி பகுதியில் பொதுவுடமை செய்யப்பட்ட அரசு வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அப்பகுதி மக்கள், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தனர். அதை தற்போது மதிமுக பொது செயலாளர் வைகோ கொண்டு வந்தாக கூறுவது ஏமாற்று வேலை. அவருக்கு பதில் கூற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னை பற்றி தொகுதி மக்கள் நன்கு அறிவீர்கள். துரை வைகோ அரசியலில் கத்துக்குட்டி." என்றும் தெரிவித்தார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்












Click it and Unblock the Notifications