அப்பா மாதிரி நான் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன்! மதிமுக நிர்வாகிகளை அதிர வைத்த துரை வைகோ!
தூத்துக்குடி: அப்பா மாதிரி தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன் எனக் கூறி ,மதிமுக நிர்வாகிகளை அதிர வைத்துள்ளார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படத்தை கட்சியினருடன் சேர்ந்து பார்த்த அவர் அதன் பிறகு பேசும் போது இதனைக் கூறினார்.
உழைப்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் இடம் என்றும் மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்லலாம் கதவுகள் திறந்தே இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

துரை வைகோ
சமீப நாட்களாக தென் மாவட்டங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மதிமுக தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ, கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். வைகோ ஆக்டிவாக இருந்த போது தென் மாவட்டங்களில் மதிமுக எந்தளவுக்கு எழுச்சியுடன் இருந்ததோ, மீண்டும் அதே எழுச்சியை அடைய வைப்பதற்கான முயற்சியில் துரை வைகோ இறங்கியிருக்கிறார்.

கட்சியினர் அதிர்ச்சி
இதனிடையே கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படத்தை கட்சியினருடன் சேர்ந்து பார்த்த துரை வைகோ, அப்பா மாதிரி தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன் எனக் கூறி கட்சியினரை அதிர வைத்துள்ளார். இது நாள் வரை நமக்காக வைகோ உழைத்தார், இனி அவருக்காக நாம் உழைக்க வேண்டும் என துரை வைகோ பேசினார். மேலும், மதிமுகவை வலிமைப்படுத்த பல திட்டங்கள் வைத்திருப்பதாகவும் இழந்த செல்வாக்கை மீட்போம் எனவும் நம்பிக்கை பொங்க பேசினார்.

கதவு திறந்துள்ளது
மதிமுகவில் உழைப்புக்கும், விசுவாசத்திற்கும் மட்டும் தான் மரியாதை என்றும் கட்சிக்காக உழைப்பவர்களை தவிர மற்றவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்லலாம் கதவுகள் திறந்தே இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார். துரை வைகோவின் அனல் கட்டும் பேச்சை கேட்டு மதிமுக நிர்வாகிகள் பலரும் அதிர்ந்து போயினர். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக அப்பா மாதிரி தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டேன் என ஒரே போடாக போட்டார் துரை வைகோ.

சுற்றுப்பயணம்
தற்போது தென் மாவட்டங்களில் மட்டும் தீவிர கவனம் செலுத்தி வரும் துரை வைகோ, விரைவில் தமிழகம் தழுவிய அளவில் மெகா டூர் ஒன்று புறப்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வைகோவை பொறுத்தவரை உணர்ச்சிவசப்பட்டு கட்சிக்காரர்களிடம் கோபப்பட்டாலும் கூட அடுத்த சில நிமிடங்களில் தன்னிடம் வசவு வாங்கியவர்களை அழைத்துப் பேசக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications